TNPL: அதிரடி காட்டிய அஷ்வின்; முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!
அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது.
டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ஷாருக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்து ஆடத் தொடங்கியது. முதலில் பேட் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது.
130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கை விரட்டிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. சிறப்பாக ஆடிய திண்டுக்கல் அணியின் கேப்டன் அஷ்வின் 46 பந்துகளில் 52 ரன்களை எடுத்திருந்தார். இதன் மூலமாக ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
அதேபோல தொடர் நாயகன் விருதை கோவை கிங்ஸ் அணியின் ஷாருக் கான் கைப்பற்றினார். இந்த இறுதிப்போட்டியைக் காண்பதற்காக இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட் அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்பின் சிறப்பாக விளையாடிய சிவம் சிங்கிற்கு ஆரஞ்ச் கேப்பும், பர்பிள் கேப் பொய்யாமொழிக்கும் வழங்கப்பட்டது. முதன் முறையாக கோப்பையை வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


