Ranbir: ஆமிர் கான் வருத்தப்பட்டு அழுததை நான் பார்த்திருக்கிறேன்; அவர் என்னிடம்.. - ரன்பீர்
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஆமிர் கான், ரன்பீர் கபூர் இருவரும் Luck by Chance, Bombay Talkies, PK போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்தவர்கள்.
பாலிவுட்டில் திரையிலகில் இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வருபவர்கள். சமீபத்தில் பாட்காஸ்ட் ஒன்றில் பேசியிருந்த நடிகர் ரன்பீர் கபூர், தனது திரையுலக வாழ்வு குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்தும் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது நடிகர் ஆமிர் கான் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியவர், ஆமிர் கான் கண்ணீர் விட்டு அழுத தருணம் குறித்து மனம் திறந்து பேசினார்.
ஆமிர் கான் குறித்து பேசிய ரன்பீர் கபூர், "நான் ஆமிர் கான் அவர்களை நேரில் சந்தித்து இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. ஒருமுறை நான் அவரை சந்தித்தபோது அவர் அழுது கொண்டு வருத்தத்துடன் என்னிடம் பேசியது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அந்த நேரத்தில் நான் அவரிடன் சென்று ஏன் அழுகிறீர்கள்? என்று கேட்டேன்.
அதற்கு அவர், என் வாழ்வின் 30 ஆண்டுகள் நான் என ரசிகர்களை மகிழ்விக்க என் வாழ்நாளை செலவழித்திருக்கிறேன். என் குடும்பம், குழந்தைகளுடன் நேரத்தை செலவிட தவறிவிட்டேன். என் மனைவி, அம்மா, குழந்தைகள் என யாரிடமும் நான் என் வாழ்வை வாழவில்லை. அவர்களுக்காக அதிக நேரம் ஒதுக்கியதில்லை.

அதை நினைத்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என்றார் என்னிடம். அதைக் கேட்கையில் மிகவும் வருத்தமாக இருந்தது. அதுவே எனக்கு வாழ்நாள் பாடமாகவும் இருந்தது. அதன்பிறகுதான் நான் என் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்" என்றார் ரன்பீர் கபூர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


