Paris Olympics: கடுமையான வெயில்; வீரர்களுக்கு 40 AC கொடுத்த இந்திய அரசு!

ஒலிம்பிக் வீரர்கள் தங்கும் கிராமத்தில் இருக்கும் விடுதிகளில் போதிய குளிரூட்டும் வசதிகள் இல்லை என அங்குள்ள இந்திய விளையாட்டு வீரர்களுக்கு 40 போர்ட்டபிள் ஏ.சிக்களை வாங்கி கொடுத்திருக்கிறது இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்.

பாரிஸில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பநிலையை எதிர்கொள்ள இந்த ஏற்பாடைச் செய்திருக்கிறது இந்திய அரசு.இந்திய ஒலிம்பிக் சங்கமும் பிரான்சில் உள்ள இந்திய தூதரகமும் கலந்தாலோசித்தப் பிறகு, இந்த ஏ.சிக்கள் வீரர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.

கடந்த சில நாள்களில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் முக்கிய இடங்களில் வெப்பநிலை 40 டிகிரியை எட்டியிருக்கின்றன. ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஸ்வப்னில் குஷல் உட்பட இறுதிப் போட்டியாளர்கள் பலரும் துப்பாக்கி சுடுதல் களத்தில் வியர்வை வடித்ததைப் பார்க்க முடிந்தது. ஒலிம்பிக்ஸ் தொடங்குவதற்கு முன்பே பல நாடுகளும் வெப்பநிலை குறித்து கவலை தெரிவித்திருந்தது.

ஆனால், மொத்த நிகழ்வின் கார்பன் அடிச்சுவடை (Carbon Footprint) குறைக்க, ஏற்பாட்டாளர்கள் ஏசிக்களை தவிர்க்க முடிவு செய்தனர். அதற்குப் பதிலாக தரை வழியாக குளிர்ந்த நீர் மூலம் அறைகளை குளிரூட்ட மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனினும், இந்த நடவடிக்கைகள் பல விளையாட்டு வீரர்களுக்கு போதியதாக இல்லை.

இதில் திருப்தி இல்லாத அமெரிக்க வீரர்கள் தங்களுடன் போர்ட்டபிள் ஏசிக்களை கொண்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக மற்றும் சில நாடுகளும் அதையே செய்யத் தொடங்கினர். இப்போது இந்தியாவும் அதையே பின்பற்றியிருக்கிறது. சில வீரர்கள் ஒலிம்பிக் கிராமத்தின் வசதிகள் பிடிக்காமல் அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்கியிருக்கின்றனர்.

Paris Weather
Paris Weather
Paris Weather
Paris Weather
Paris Weather

இந்த ஏசிக்கள் பயிற்சி, போட்டிகள் என தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்திய வீரர்களுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.