பைக்கில் சென்ற தம்பதிமீது அறுந்து விழுந்த மின் கம்பி; தீயில் கருகி உயிரிழந்த சோகம் - உ.பி அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலம், புடான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், வேத் பால் - மீனா தேவி தம்பதி. இவர்கள் இருவரும், கடந்த 2-ம் தேதி, இருவரும் தங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தனர். பின்னர் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, முசாஜ் காவல் நிலையம் அருகே வந்துகொண்டிருக்கையில், எதிர்பாராத விதமாக 110v உயர் அழுத்த மின்கம்பி, அவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தின்மீது அறுந்து விழுந்திருக்கிறது. அதையடுத்து, இருவர்மீதும் மின்சாரம் பாய்ந்து, இரு சக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. அதைக் கண்ட பொதுமக்கள் கூச்சலிடவே, அருகிலிருந்த காவல்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து தம்பதியை மீட்க முயன்றனர். ஆனால், தம்பதி இருவரும் இறந்துவிட்டனர்.

மரணம்

பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி, காண்போரை `பதற வைக்கின்றன. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த தம்பதியின் உறவினர்கள், `மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால், இன்று இரண்டு உயிர்களைப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம். இந்த விவகாரத்தில் மின் கேபிளை பராமரிக்கத் தவறிய ஊழியர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என வலியுறுத்தினர்.

அதைத் தொடர்ந்து மின்வாரிய உயரதிகாரிகள், `சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.