சென்னை: கார் கண்ணாடியை உடைத்து திருட்டு... திருச்சியை சேர்ந்த பிரபல கொள்ளையன் சிக்கியது எப்படி?
பெங்களூருவைச் சேர்ந்தவர் நித்யா (48). இவர், தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் இணை பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரின் கணவர் ஆனந்தகுமார். இவர்கள் இருவரும் கடந்த 27-ம் தேதி சென்னைக்கு காரில் வந்தனர். பின்னர் அடையாறு பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் காரை நிறுத்தி விட்டு இருவரும் அந்தப்பகுதியில் உள்ள அழகு நிலையத்துக்கு சென்றனர். அங்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. காருக்குள் இருந்த ஹேண்ட் பேக், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப், ஏ.டி.எம். கார்டு, பணம் உள்ளிட்டவைகள் திருட்டு போயிருந்தது.
அதனால் அதிர்ச்சியடைந்த நித்யாவும் அவரின் கணவர் ஆனந்தகுமாரும் அடையாறு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது காரின் கண்ணாடியை உடைத்து திருடிய நபர்கள் குறித்த தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. அதன்அடிப்படையில் விசாரித்தபோது இந்தத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த பிரதீப் (39) அவரின் கூட்டாளி உதயகுமார் (39) எனத் தெரியவந்தது. இதையடுத்து அடையாறு போலீஸார் திருச்சி ராம்ஜி நகருக்குச் சென்று பிரதீப்பை கைது செய்தனர். அவரின் கூட்டாளியான உதயகுமாரை போலீஸார் தேடிவருகிறார்கள். பிரதீப்பிடம் விசாரித்தபோது அவர் டிப்ளமோ படித்து விட்டு கடந்த 19 ஆண்டுகளாக திருட்டில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இவர் மீது டெல்லி, மும்பை, ஹைதராபாத் என இந்தியா முழுவதும் திருட்டு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து போலீஸார் பிரபல கொள்ளையனான பிரதீப்பிடம் விசாரித்து வருகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


