சென்னை: காதலிப்பதாக ஏமாற்றி, நெருங்கி... ஆபாசமாக படம் எடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை!
சென்னை எம்.கே.பி நகர் பகுதியில் வசித்து வரும் 30 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 2020-ம் ஆண்டு எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், `தனக்கு கடந்த 2012-ம் ஆண்டு பொன்னேரியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அறிமுகமானார். பின்னர் நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தோம். அப்போது என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார் ரமேஷ். அதை நம்பி அவரும் நானும் சந்தோஷமாக இருந்தோம். அப்போது எனக்கு தெரியாமல் என்னை ஆபாசமாக படமெடுத்த ரமேஷ், அதை காண்பித்து என்னை மிரட்டி 20 லட்சம் ரூபாய், 19 சவரன் தங்க நகைகளை பறித்தார். பின்னர் 2020-ம் ஆண்டு என்னை திருமணம் செய்ய மறுத்த ரமேஷ், என்னுடைய சாதி குறித்து இழிவாக பேசியும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். எனவே என்னை ஏமாற்றிய ரமேஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து எம்.கே.பி.நகர் போலீஸார், இளம்பெண் அளித்த புகாரின் பேரில் ரமேஷ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிமன்ற விசாரணை முடிந்து கடந்த 31.7.2024-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் ரமேஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த போலீஸாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


