தக் லைஃப்பை அடுத்து சிம்புவுடன் கைகோர்க்கும் இயக்குநர் யார் தெரியுமா? - சிம்புவின் பக்கா ஸ்கெட்ச்
இந்தாண்டு இரண்டு படங்களை முடித்துவிட வேண்டும் என்ற முழு முயற்சியில் இறங்கி விட்டார் சிலம்பரசன். இப்போது கமலின் தக் லைஃப் படப்பிடிப்பில் இருக்கும் இவர் விரைவில் 50வது படத்தைத் தொடவிருக்கிறார். இதற்காகத் தனது அடுத்தடுத்த லைன் அப்களை அழகாக ஸ்கெட்ச் போட்டு வருகிறார் அவர்.
தக் லைஃப் என்ற படத்தில் சிம்பு நடித்து வரும் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியவர் துல்கர் சல்மான்தான் என்ற பேச்சு இருந்தது. ஆனால், துல்கர் தக் லைஃப்பில் இணைவதற்கு முன்னரே, சிம்புவிடம்தான் நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். அப்போது சிம்பு, ராஜ்கமல் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் எஸ்.டி.ஆர்.48 படத்திற்காக கமிட் ஆகியிருந்தார். இந்த சமயத்தில் தக் லைஃப்பிற்காக மணிரத்னத்திடம் இருந்து வந்த வாய்ப்பு என்பதாலும், பிரமாதமான கதாபாத்திரம் என்பதாலும் அந்த கதாபாத்திரத்தை மிஸ் பண்ண வேணாம் எனக் கமலே சொன்னதும், சந்தோஷமாக தக் லைஃப்பிற்குள் வந்தார் சிம்பு. இப்போது முதல் பாதி வரை படப்பிடிப்பு நிறைவு பெற்று, டப்பிங்கும் பேசிவிட்டார் எனச் சொல்லியிருந்தோம்.
இந்நிலையில்தான் தக் லைஃப் படப்பிடிப்பை விரைவில் அவர் முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்தடுத்த படங்களுக்குச் செல்கிறார் சிம்பு. மலையாளத்தில் 2018 படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப்பின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தக் கதை ரொம்பவே வித்தியாசமான கதை என்றும், சிம்புவின் படங்களிலேயே பெரிய பட்ஜெட் படமாகவும் இது அமையும் என்றும் சொல்கிறார்கள். ஒருசில கோடிகள் பட்ஜெட்டிலேயே முழுப்படமும் முடித்துக் கொடுத்துவிடும் மலையாள திரையுலகில், 26 கோடி பட்ஜெட்டில் 2018 படத்தை இயக்கியிருந்தார் ஜூட் ஆண்டனி.
அந்தப் படம் உலகெங்கும் 170 கோடிக்கு மேல் வசூலைக் குவித்து சாதனை படைத்ததுடன், மலையாள சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆகையில் ஜூட், இப்போது சிம்புவிடம் சொல்லியிருக்கும் இந்தக் கதையும் பெரிய பட்ஜெட் என்பதும், ஆனால் இந்தக் கதை சிம்புவை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்லும் படமாகவும் அமையும் என்றும் சொல்கிறார்கள். ஜூட் ஆண்டனிக்கு தமிழ் சினிமா மீது தனி காதல் உண்டு. ரஜினியை வைத்து தமிழில் ஒரு படம் இயக்கிவிட வேண்டும் என்பது ஒரு கனவு, சிம்புவின் படத்திற்குப் பின் அந்தக் கனவு நனவாகலாம் என்ற பேச்சும் இருக்கிறது.

ஜூட் ஆண்டனி கடந்த ஆண்டிலிருந்து கடந்த சில மாதங்களாகவே சிம்புவிடம் தொடர்பில் இருக்கிறார் என்றும், அப்போதே சிம்புவிடம் லைன் சொல்லி அவரிடம் ஓகே வாங்கிவிட்டதாகவும் தகவல். தக் லைஃப்பை முடித்துவிட்டு இந்த படத்தில் இணைகிறார் சிம்பு. இதன் பிறகே தேசிங்கு பெரியசாமி படத்திற்கு அவர் வரலாம் என்றும் சொல்கிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


