ஐ.ஏ.எஸ் தேர்ச்சி ரத்து; முன்ஜாமீன் மனு தள்ளுபடி - பூஜா கேட்கர் துபாய் தப்பி ஓட்டம்?!
மகாராஷ்டிராவை சேர்ந்த பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கேட்கர் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து அவரது ஐ.ஏ.எஸ் தேர்வை யு.பி.எஸ்.சி ஆணையம் ரத்து செய்துவிட்டது. பெற்றோர் பெயர் மற்றும் தனது பெயரை மாற்றி மோசடி செய்து நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதவிர பயிற்சி பணியின் போது அளவுக்கு அதிகமாக சலுகை கேட்டது, சாதிச் சான்றிதழ் மோசடி, சொந்த காரில் சுழல் விளக்குபொருத்தியது உட்பட பல குற்றச்சாட்டுகள் பூஜா மீது சுமத்தப்பட்டது.
இதையடுத்து பூஜா மீது யு.பி.எஸ்.பி ஆணையம் விசாரணை நடத்தி முதலில் அவரை பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி பணியில் இருந்து நீக்கியது. அதனை தொடர்ந்து மாநில அரசு அனுப்பிய விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பூஜாவின் ஐ.ஏ.எஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதோடு அவர் எதிர்காலத்தில் யு.பி.எஸ்.சி தேர்வு எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பூஜாவின் மோசடியை தொடர்ந்து டெல்லி போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து பூஜா இப்போது தலைமறைவாகிவிட்டார். அவரின் மொபைல் போன்கள் ஆஃப் செய்யப்பட்டுள்ளன. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதனால் அவர் துபாய் தப்பிச்சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. டெல்லி கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி பூஜா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு மீதான விசாரணையின் போது பூஜாவிற்கு எதிரான குற்றச்சாட்டு மிகவும் சீரியஸானது என்பதால் முழுமையாக விசாரிக்கப்படவேண்டியிருக்கிறது. எனவே அவரது போலீஸ் காவல் அவசியம். இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது என்று கூறி பூஜாவின் முன்ஜாமீன் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. பூஜா தனது வழக்கறிஞர் மூலம் இம்மனுவை தாக்கல் செய்தார். அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்தே அவர் தலைமறைவானார். அவர் இன்னும் இந்தியாவில் தான் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் வெளிநாடு சென்றதற்கான ஆதாரங்கள் சிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே விவசாயியை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கைது செய்யப்பட்ட பூஜாவின் தாயார் மனோரமா ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


