தாளவாடி டு வயநாடு... வேலைக்குச் சென்ற இடத்தில் உயிரிழந்த சோகம்; தாய், தந்தை, மகன் சடலமாக மீட்பு
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மாயமான பலரை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள காமயன்புரம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி, அவரின் மனைவி புட்டு சீத்தம்மா, மகன் மகேஷ் ஆகியோர் வயநாட்டில் உள்ள முண்டக்கை என்ற ஊரில் தங்கி தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து வந்தனர்.
முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ரங்கசாமி, புட்டு சித்தம்மா, மகேஷ் ஆகிய மூவரும் காணாமல் போனது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மீட்பு படையினரின் தீவிர தேடுதலில் ரங்கசாமி, புட்டு சித்தம்மா ஆகியோரின் உடல்கள் அவர்கள் தங்கியிருந்த பகுதியில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது. மகேஷின் நிலை என்னவானது என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில், வெள்ளம் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மகேஷின் உடல் வீட்டோடு பல கிலோ மீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டு இருப்பதை மீட்புப் படையினர் கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து, மகேஷின் உடலை மீட்புப் படையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர். இதைத் தொடர்ந்து, மூவரின் சடலமும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு தாளவாடி அருகே உள்ள காமயன்புரம் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டுஅடக்கம் செய்யப்பட்டது. நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்திருப்பது தாளவாடி பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


