ஐடிபிஐ வங்கியை வாங்கும் போட்டியில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் - யார் தெரியுமா?

இந்தியாவில் செயல்பட்டுவரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஐ.டி.பி.ஐ வங்கியை மத்திய அரசு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த வங்கியை வாங்குவதற்கான போட்டியில் இந்தியாவில் பிறந்து, கனடாவில் செட்டிலாகி பெரிய தொழிலதிபராக இருக்கும் பிரேம் வாட்ஸா என்பவர் முன்னணியில் இருக்கிறார்.

பாஜக அரசு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுவந்தது. அதில் நாட்டில் உள்ள வங்கிகளை இணைப்பது, சில வங்கிகளைத் தனியார் மயமாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.டி.பி.ஐ வங்கியின் பெரும்பான்மை பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்தது. 

பிரேம் வாட்ஸா

ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசு 45.48 % பங்குகளையும், எல்.ஐ.சி. நிறுவனம் 49.24% பங்குகளையும் வைத்துள்ளன. இதில் 60.7% பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 2022-ம் ஆண்டே வெளியிடப்பட்டது. இந்நிலையில் 2 ஆண்டு காலத்திற்கு பிறகு, ஐடிபிஐ வங்கியை வாங்குவதற்கு பல நிறுவனங்கள் முன்வந்த நிலையில், இறுதியாகத் தற்போது ஐ.டி.பி.ஐ வங்கிய வாங்குவதற்கான 3 நிறுவனங்களை ரிசர்வ் வங்கி தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவை கனடா நாட்டின் ஃபேர்ஃபாக்ஸ் இந்தியா ஹோல்டிங்ஸ், எமிரேட்ஸ் என்பிடி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகியவை ஆகும். 

இதில் முன்னணியில் இருப்பது கனடாவைச் சேர்ந்த ஃபேர்ஃபாக்ஸ் இந்தியா ஹோல்டிங்ஸ் நிறுவனம் என்று கூறப்படுகிறது. இந்நிறுவனம் கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோடீஸ்வரரான பிரேம் வாட்ஸா என்பவருக்குச் சொந்தமானது. இவர் ஹைதராபாத்தில் பிறந்தவர். ஐஐடி மெட்ராஸில் படித்து கனடாவில் செட்டிலாகினார். அங்கு முதலில் மார்கெல் ஃபைனான்ஷியல்  என்ற நிறுவனத்தை தொடங்கிய அவர், பின்னர் ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்ஸ் என்று பெயர் மாற்றினார்.

பின்னர் சில காப்பீட்டு நிறுவனங்களைக் கையகப்படுத்தினார். பின்னர் இவர், 2019-ம் ஆண்டில் ஹாம்ப்ளின் முதலீட்டு கவுன்சிலின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது ஐடிபிஐ வங்கியை வாங்குவதற்குத் தீவிர முனைப்புடன் உள்ளார். 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.