Paris Olympics Live Updates : நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட மனு பாக்கர்! - நான்காம் இடம்பிடித்து சோகம்! - Day 8 Updates

வில்வத்தையில் ஏமாற்றம்!

வில்வித்தையின் தனிநபர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்திய வீராங்கனை பஜன் கவுர் சூட் அவுட்டில் இந்தோனேஷிய வீராங்கனையிடம் வீழ்ந்து வெளியேறினார்.

வில்வித்தையில் காலிறுதிக்கு முன்னேற்றம்!

வில்வித்தையின் பெண்கள் தனிநபர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி ஜெர்மனி வீராங்கனையை 6-4 என்ற செட் புள்ளிகளில் வீழ்த்தி காலிறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மனு பாக்கர் கண்ணீர்!

இறுதிப்போட்டியில் ரொம்பவே பதற்றமாக இருந்தேன். ஒவ்வொரு ஷாட்டாகத்தான் அணுகினேன். ஆனாலும் களம் எனக்கு சாதகமாக அமையவில்லை. என்னுடைய சிறப்பான செயல்பாட்டை கொடுக்கவே முயன்றேன். இரண்டு பதக்கங்களை வென்றதில் மகிழ்ச்சி. ஆனால், இந்த நான்காவது இடத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இன்றைக்குதான் மதிய உணவை அருந்தப் போகிறேன். இங்கே இத்தனை நாட்களாக காலை உணவை அருந்திவிட்டு பயிற்சிக்கு வந்துவிடுவேன். மாலைதான் திரும்புவேன். அதனால் இன்றைக்குதான் போட்டிகளெல்லாம் முடிந்துவிட்டதால் மதிய உணவை எடுத்துக்கொள்ளப் போகிறேன்.

- மனு பாக்கர்.

மனுவுக்கு நான்காம் இடம்!

25 மீ ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிப்போட்டியில் ஹங்கேரி வீராங்கனையுடன் சூட் அவுட்டில் தோல்வியடைந்து நான்காவது இடம்பிடித்தார் மனு பாக்கர்.

தொடங்கியது இறுதிப்போட்டி!

25 மீ ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிப்போட்டி தொடங்கியது. மனு பாக்கர் களத்தில் இருக்கிறார்.

தகுதிச்சுற்றில் இரண்டாமிடம்!

இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் மனு பாக்கர் இரண்டாமிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டியில் மனு!

துப்பாக்கிச் சுடுதலின் 25 மீ ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இன்னும் சில நிமிடங்களில் களமிறங்குகிறார்.

போட்டி அட்டவணை!

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: இன்று இந்திய வீரர்கள் பங்குபெறும் போட்டிகளின் அட்டவணை.

#Paris2024 | #IndiaAtParis2024 | #Olympics

பதக்கப்பட்டியல்

ஏழாம் நாள் முடிவில் பதக்கப் பட்டியலில் 47-வது இடத்தில் இந்தியா!

#Paris2024 | #IndiaAtParis2024 | #Olympics

Medal Tally

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.