திருவாரூர்: குடும்ப தகராறு; கணவன் கொலை... மனைவியை கைது செய்து போலீஸ் விசாரணை

திருவாரூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் நாகப்பிள்ளை. இவரின் மகன் காத்தராசு, வயது 57. கட்டட சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி நீலா, வயது 48 . இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் காத்தராசு அடிக்கடி மது அருந்திவிட்டு வருவதால், கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக நீலா அடிக்கடி தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவும் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. வாக்குவாதமாக தொடங்கிய தகராறு ஒருகட்டத்தில் தீவிரம் அடைந்தது.

அப்போது, எதிர்பாராத விதமாக நீலா, இரும்பு கம்பியினால் காத்தராசுத் தலையில் தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். அருகில் உள்ளோர் அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டார் என கூறினர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த திருவாரூர் தாலுக்கா காவல்துறை காத்தராசு உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து நிலாவை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த கொலைக்கு குடும்ப தகராறு தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா...? என்று காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.