மும்பை: 14 வயது சிறுமிடம் ஐ லவ் யூ சொன்ன வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை!

மும்பையில் ஒரு வாலிபர் மைனர் பெண் ஒருவரிடம் தன் காதலை தெரிவித்த காரணத்துக்காக, 2 ஆண்டு சிறை தண்டனைக்கு ஆளாகி இருக்கிறார். மும்பையை சேர்ந்த ரபீக் ஷேக்(19) என்ற வாலிபர் தனது பகுதியில் வசிக்கும் 14 வயது பெண்ணை நீண்ட நாள்களாக ஒருதலையாக காதலித்து வந்தார். அச்சிறுமி எங்கு சென்றாலும் அவரை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். 2019ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி இரவு 14 வயது சிறுமி தனது தாயாருக்கு தேநீர் வாங்குவதற்காக கடைக்கு சென்றார்.

அவர் தேநீர் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்த போது தனது வீட்டு படிக்கட்டில் ஏறிய போது ரபீக் ஷேக் அப்பெண்ணின் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்து நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன் என்று காதல் பேசினார். உடனே மைனர் பெண் அவரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வீட்டிற்கு நடந்த சம்பவத்தை கூறி அழுதார். அப்பெண்ணின் தாயார் கீழே வந்து ரபீக்கிடம் வாக்குவாதம் செய்தார். உடனே ரபீக் அப்பெண்ணின் தாயாரை மிரட்டி இருக்கிறார். இதையடுத்து மறுநாள் இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் ரபீக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரபீக் 2023ம் ஆண்டு வரை வரை சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வந்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் தீர்ப்பு கூறிய நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தாயாரின் சாட்சியங்கள் குற்றத்தை உறுதிபடுத்துக்கின்றன. அவர்களின் சாட்சியத்தை மறுக்கும் வகையில் எந்த வித ஆதாரமும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறிய நீதிபதி அஸ்வினி குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் அபராதமும் விதித்தார். மைனர் பெண் 14 வயதாக இருந்த போது குற்றம் நடந்தது. ஆனால் அப்பெண் தனது 18 வது வயதில் கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்தார். ரபீக் ஏற்கனவே இவ்வழக்கீல் 3 ஆண்டு சிறையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.