தேனி: `அரசு வேலைகளுக்கு ரூ.54 லட்சம்..!’ - போலி பணி ஆணை கொடுத்து சிக்கிய சகோதரர்கள்
தேனி நான்கு குழாய் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். இவர் மினரல் வாட்டர் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தேனி ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் தண்ணீர் விநியோகம் செய்துள்ளார். அப்போது அங்கு தற்காலிக டிரைவர்களாக பணியாற்றி வந்த பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த பொன் ஆண்டவர் மற்றும் அவரது சகோதரர் பொன் சண்முகநாதன் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சகோதரர்கள் இருவரும் அய்யனாரிடம் தங்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் தெரியும். இதன் மூலம் பலருக்கும் அரசு வேலை வாங்கி கொடுத்திருக்கிறேம். அய்யனாருக்கு நகராட்சியில் அலுவலக உதவியாளர் வேலையும், அவரின் மனைவிக்கு ஊரக வளர்ச்சி துறையில் கம்யூட்டர் ஆப்பரேட்டர் வேலையும் வாங்கி தருகிறோம் எனக் கூறி ரொக்கமாகவும் வங்கி மூலமாகவும் 17 லட்சத்து 60 ஆயிரம் பெற்றுள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்ட சகோதரர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநரின் கடிதம் மற்றும் போலி பணி நியமன ஆணையும் வழங்கியுள்ளனர். மேலும் தலைமைச் செயலகத்தில் பேசுவதாக ஒரு நபரை பேச வைத்து ஏமாற்றியுள்ளனர்.
இதை நம்பிய அய்யனார், அவரின் உறவினர்களிடம் அரசு வேலை பெற்றுவிட்டதாகக் கூற, அவர்கள் உறவினர்கள் 5 பேர் தங்களுக்கும் அரசு வேலை வேண்டும் எனக் கூறி பொன் ஆண்டவர், பொன் சண்முகநாதன் ஆகியோரிடம் ரூ.54 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளனர். இதற்கிடையே அய்யனார் மனைவி ஆர்த்தி தனக்கு கிடைத்த பணி ஆணையை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் காட்டி விசாரித்தபோது, அந்த ஆணை போலி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அய்யனார் தன் உறவினர்களை அழைத்து கொண்டு பொன் ஆண்டவர், பொன் சண்முகநாதனிடம் பணத்தை திரும்பி கொடுக்கும்படி கேட்டுள்ளார். இருவரும் பணத்தை தருவதாகக் கூறி ஏமாற்றி வந்துள்ளனர்.

இதுகுறித்து அய்யனார் மனைவி ஆர்த்தி மாவட்ட குற்ற பிரிவு காவல் துறையினரிம் புகார் அளித்தனர். அதனடிப்படையில் சகோதரர்களான பொன் ஆண்டவர் மற்றும் பொன் சண்முகநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


