டூவிலரில் அட்ராசிட்டி; இளைஞருக்கு அட்வைஸ் செய்தவர் ஸ்க்ரூ டிரைவால் குத்தி கொலை - நடந்தது என்ன?
தேனி மாவட்டம் போடி அருகே ராசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன்(45). இவருக்கு ஜெயா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் ராசிங்காபுரம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிந்தார். அப்போது தேவாரம் அருகே லட்சுமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சூர்யா(22) டூவிலரில் அதிவேகமாக வந்து குபேந்திரனை இடிப்பது போல் சென்றுள்ளார். இதில் கோபமைடந்த குபேந்திரன், `வண்டிய மெதுவா ஓட்ட மாட்டாயா?’ எனக் கூறி திட்டியுள்ளார். இதனால் குபேந்திரன் சூர்யாவிற்கும் இடையே வாய் தகராறு ஏற்படவே குபேந்திரனை கொலை செய்துவிடுவதாக சூர்யா மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனால் கோபத்துடன் சென்ற சூர்யா, லட்சுமி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த தனது தம்பி முத்துக்குமார், தந்தை கண்ணன், தாய் பாக்கியலட்சுமி மற்றும் உறவினர்கள் 8-க்கும் மேற்பட்ட நபர்களுடன் ஆட்டோவில் ராசிங்கபுரத்திற்கு மீண்டும் வந்துள்ளார். குபேந்திரன் அழைத்து வாக்குவாதம் செய்ய அது அடிதடி தகராறாக மாறியுள்ளது. அப்போது சூர்யாவுடன் வந்தவர்கள் குபேரனின் கைகளை பிடித்துக் கொள்ள சூர்யாவும், முத்துக்குமாரும் மறைத்து வைத்திருந்த ஸ்க்ரூ டிரைவை எடுத்து குபேந்திரன் வயிற்றுப் பகுதியில் குத்தி உள்ளார்.
இதில் குபேந்திரன் இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். அருகாமையில் இருந்தவர்கள் அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ரத்த வெள்ளத்தில் அனுமதிக்கப்பட்ட குபேந்திரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து போடி தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து சூர்யா, முத்துக்குமார் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்தனர்.
.jpg)
இதற்கிடையே உயிரிழந்த குபேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் குபேந்திரன் உறவினர்கள் வாகனத்தை வழிமறித்து வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும்படி முறையிட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதாகவும் உறுதியளித்தனர். இதன் காரணமாக சுமார் அரை மணி நேரம் போடி அரசு மருத்துவமனை பரபரப்பாக காணப்பட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


