`இப்படி செஞ்சாத்தான் உங்களுக்கு தீர்வு’ - மனுதாரரை தற்கொலைக்குத் தூண்டி வீடியோ எடுத்த யூடியூபர் கைது
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள ஆழ்வார்தோப்பு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்த போது திடீரென எளிதில் தீப்பற்ற கூடிய ’தின்னர்’ என்னும் திரவத்தை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிப்காட் காவல் நிலைய முதல் நிலை காவலர் வெங்கடேஷ் மற்றும் போலீஸார் உடனடியாக பாஸ்கரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர்.
பின்னர் அவரிடம் போலீஸார் விசாரணைமேற்கொண்டனர். அதில், பாஸ்கருக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரரான பாலசுப்பிரமணியன் என்பவருக்கும் இடையே நடைபாதை சம்பந்தமாக நிலப்பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் பாஸ்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுப்பதற்காக புறப்பட்டபோது அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர், தான் நடத்தி வரும் யூடியுப் சேனலின் அதிக லைக் பெரும் ஆதாயத்திற்காக, பாஸ்கரிடம் ”வெறும் புகார் மனுவை கொடுத்தால் மட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.
உங்கள் மீது தீ வைத்துக் கொள்வது போல் தற்கொலை முயற்சி செய்யுங்கள், அப்போது நான் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்புகிறேன். அப்போதுதான் உங்கள் மனுவுக்கு தீர்வும் உரிய நியாயமும் கிடைக்கும்” எனக் கூறியுள்ளார். இதைக் கேட்ட பாஸ்கர், அவர் கூறியது போலவே தின்னரை வாங்கியுள்ளார்.
.jpg)
அவரையும் கூடவே அழைத்து வந்த பாஸ்கர், தின்னர் பாட்டிலை பையில் வைத்து மறைத்து எப்படியோ ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்பட்ட ஆதாயத்திற்காக மனுதாரரை தவறான நோக்கத்துடன் மூளைச்சலவை செய்து மனுதரரை தற்கொலைக்கு தூண்டியதக விக்னேஸ்வரனை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


