ஓலா எங்கள் டேட்டாவைத் திருடுகிறது! - குற்றம்சாட்டும் MapMyIndia; ஒப்பந்தத்தை நிஜமாகவே மீறியதா ஓலா?

சில வாரங்களுக்கு முன்பு ",கூகுள் மேப்பை நாங்கள் பயன்படுத்தப் போவதில்லை; அதிலிருந்து வெளியே வருகிறோம்" என்று கெத்தாகச் சொல்லியிருந்தது ஓலா. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் - இதனால் தங்களுக்குக் கோடிக்கணக்கில் பணவிரயம் ஆவதாகவும், அதனால், இனிமேல் சொந்தமாகத் தாங்களே உருவாக்கிய மேப்களைத்தான் பயன்படுத்தப் போவதாகவும் கூறியிருந்தார்கள் ஓலா கேப் நிறுவனத்தினர். 

வாடகை கேப், டெலிவரி போன்ற விஷயங்களுக்கு நேவிகேஷன் என்பது மிக மிக முக்கியம். அதற்கு கூகுள் மேப்ஸ் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. இந்த கூகுள் மேப்பை இன்டக்ரேட் செய்து பயன்படுத்துவதற்கு, ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை செலவழிப்பதாகச் சொல்லியிருந்தார் ஓலா நிறுவனர் பவிஷ் அகவர்வால். அதனால் கூகுள் மேப்பிலிருந்து வெளியேறி, சொந்தமாக மேப் நேவிகேட் செய்து - ஸ்ட்ரீட் வியூ, 3டி மேப் மற்றும் இண்டக்ரேட்டட் இமேஜஸ் போன்ற தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்தப்போவதாகத் தெரிவித்திருந்தார்கள். இதைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் கிளவுட் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிலிருந்தும் வெளியேறியது ஓலா.

Ola Delivery

அதெப்படி கூகுள் மேப் உதவி இல்லாமல் ஓலாவால் நேவிகேட் செய்ய முடியும் என்று தொழில்நுட்பப் புள்ளிகள் பிரமித்திருக்கும் வேளையில்தான், ‛ஓ... இதுதான் காரணமா’ என்று இப்போது ஓலா மீது நிறைய குற்றச்சாட்டுகள் விழுந்து கொண்டிருக்கின்றன. அதில் மேப் மை இந்தியா நிறுவனத்தின் தாய் நிறுவனமான CE Info Systems எனும் கம்பெனி, "ஓலா எங்கள் டேட்டாவைத் திருடியிருக்கிறது" என்று அந்த நிறுவனம் மீது குற்றச்சாட்டு வைத்திருக்கிறது. 

"ஓலா எங்கள் க்ளையன்ட்டின் API (Application Programming Interface) மற்றும் SDK (Software Development Kits) போன்ற இன்டர்ஃபேஸ்களைத் திருடி, தங்கள் ஓலா மேப்பை டெவலப் செய்திருக்கிறது. இதன் மூலம் எங்கள் க்ளையன்ட்களின் டேட்டாக்களும் முக்கியமான விஷயங்களும் ஓலா சாஃப்ட்வேர் வசம் காப்பி செய்யப்பட்டுத் திருடப்பட்டிருக்கிறது தெரிய வந்திருக்கிறது!" என்கிறது CE Info Systems நிறுவனம். இதைத் தொடர்ந்து ஓலா எலெக்ட்ரிக் மற்றும் கேப்ஸ் நிறுவனத்துக்கு லீகலாக ஒரு நோட்டீஸும் அனுப்பப்பட்டிருக்கிறது. 

Ola Founder Bavish Agarwal

இத்தனைக்கும் ஜூன் 2021-ல், CE Info Systems-உடன் இணைந்து அதன் டேட்டாக்களைப் பயன்படுத்துவதற்கு ஓர் ஒப்பந்தம் போட்டது ஓலா. அந்த லீகல் நோட்டீஸில், தங்கள் நிறுவனத்துடன் Co-Mingling மற்றும் ரிவர்ஸ் இன்ஜீனியரிங் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதை மீறி, சட்டத்துக்குப் புறம்பாக CE Info Systems பயனாளர்களின் கான்ஃபிடன்ஷியல் டேட்டாக்களை ரிவர்ஸ் இன்ஜீனியரிங் செய்து, ஓலா காப்பிரைட் பிரச்னைக்கு ஆளாகியிருக்கிறது. 

Ola Bikes
போன ஜூலையில்தான் `ஓலா மேப்’-பை ரோல் அவுட் செய்திருந்தது ஓலா. ஒரு மாதத்துக்குள்ளாகவே இப்படி ஒரு பிரச்னைக்கு உள்ளாகியிருக்கிறது. ஓலானாலே பிரச்னைதான் போல!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.