சென்னை: `பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமான உடல்மொழி’ - யூடியூபர் `பிரியாணி மேன்’ அபிஷேக் கைது

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், தெற்கு மண்டல கணினிசார் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், `நான் தினமும் செம்மொழி பூங்காவில் நடைபயிற்சி செய்வது வழக்கம். அந்தப் பூங்காவின் நற்பெயரைக் கெடுக்கும் வகையிலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமான உடல்மொழி சைகைகளோடு வீடியோ பதிவு செய்து, அதை பிரியாணி மேன் என்ற யூடியூப்பில் பதிவு செய்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்அடிப்படையில் சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து `பிரியாணி மேன்’ யூடியூப் சேனலை நடத்தி வரும் அபிஷேக் ரபி (29) என்பவரை கைது செய்தனர்.

யூடியூப்

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், ``யூடியூப்களில் எந்தவித விதிமுறைகளும் இல்லாமல் கமர்ஷியல் நோக்கத்தோடு வீடியோக்கள் பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில்தான் சென்னை செம்மொழி பூங்காவைக் குறித்து அவதூறான கருத்துக்களை `பிரியாணி மேன்’ என்ற யூடியூப்பில் வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த யூடியூப்பை நடத்தி வருபர் அபிஷேக் ரபி. இவர் செம்மொழி பூங்கா விவகாரம் மட்டுமல்லாமல் சக யூடியூபர்கள் குறித்தும் அவதூறான கருத்துக்களை வீடியோவாக பதிவு செய்து தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இந்தநிலையில்தான் அபிஷேக் ரபி மீது பெண் ஒருவர் எங்களிடம் புகாரளித்ததும் அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.