HBD Christopher Nolan: ஹாலிவுட்டின் மாய வித்தகன் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் குறித்த 15 தகவல்கள்!

`இன்டர்ஸ்டெல்லர், `இன்செப்ஷன், `டெனட், `தி டார்க் நைட் டிரைலாஜி, `தி பிரஸ்டீஜ் போன்ற பிரமிக்க வைக்கும் திரைப்படங்களை எடுத்தவர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்.

டிஜிட்டல் தொழில்நுட்பம், 3டி தொழில்நுட்பம் மற்றும் அதீத கிராபிக்ஸ் காட்சிகள் போன்றவற்றைப் பெரிதும் விரும்பாதவர். `இன்செப்ஷன் படத்தை 3டி-யில் ரி-ரிலீஸ் செய்யக் கேட்டதற்குக் கூட விடாப்பிடியாக அதை மறுத்தவர். Dunkirk, Inception, Memento என தன் திரைப்படங்களுக்காக 8 முறை ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் தேர்வாகி விருதுகளைத் தவறவிட்ட கிறிஸ்டோபர் நோலன், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை முதன் முதலாக இந்த ஆண்டு ஓப்பன்ஹெய்மர் படத்துக்காக வென்றார். சமீபத்தில் நடந்த கோல்டன் குளோப் விருதுகளிலும் இப்படத்திற்காகச் சிறந்த இயக்குநருக்கான விருதை முதன் முதலாக வென்றார் நோலன்.

கிறிஸ்டோபர் நோலன்
இன்று அவரின் பிறந்தநாள். இவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்க்கலாம்.

1. நோலன் தனது 7-ம் வயதிலிருந்தே குறும்படங்களை இயக்க ஆரம்பித்துள்ளார்.

2. நோலன் எந்த விதமான சமூகவலைத்தளங்களிலும் இல்லை. குறிப்பாக அவரிடம் ஸ்மார்ட்போன் கிடையாது என்பதை அவரே பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

3. அவரின் படங்களில் பெரும்பாலும் கிராபிக்ஸ் காட்சிகளைத் தவிர்த்துவிடுவார். உதாரணமாக இன்செப்ஷன் படத்தில் வரும் பில்டிங் சுற்றும் காட்சி மற்றும் இன்டர்ஸ்டெல்லார் படத்தில் வரும் 5வது பரிமாணத்திற்குக் கதாநாயகன் செல்லும் காட்சிகளைச் சொல்லலாம்.

4. இன்டர்ஸ்டெல்லர் படத்தில் வரும் ராக்கெட் ஷாட் நாசா அனுப்பிய உண்மையான ராக்கெட்டில் எடுக்கப்பட்டது.

5. 2019-ம் ஆண்டில்தான் கருந்துளையின் (Black hole) முதல் புகைப்படத்தை நாசா வெளியிட்டது. ஆனால் நோலன் 2014-ல் வெளியான தன்னுடைய இன்டர்ஸ்டெல்லர் படத்திலேயே கருந்துளையைக் காட்சிப்படுத்தியிருப்பார்.

6. கிப் த்ரோன் என்னும் ஈர்ப்பு இயற்பியல் மற்றும் வானியற்பியல் அறிவியலாளர் நோலனுக்கு இன்டர்ஸ்டெல்லார் படத்தில் உதவியிருப்பார். இவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இத்துறைகளுக்காக டாக்டர் பட்டம் பெற்றார்.

7. ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் எடுத்த கஜினி உண்மையில் நோலனின் மெமன்ட்டோ படத்தின் கூறுகளைக் கொண்ட தழுவலாகும்.

8. நோலன் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்றுள்ளார். இங்கிலாந்தில் அவருக்கு உயரிய சர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

9. நோலன்தான் பேட்மேன் படத்தை இயக்கிய முதல் அமெரிக்கர் அல்லாத இயக்குநர்.

கிறிஸ்டோபர் நோலன் தன் டன்கிரிக்

10. நோலன் திரைப்படம் எடுப்பதற்கு எந்த ஒரு இன்ஸ்டிடியூட்க்கும் சென்று கற்றதில்லை.

11. சர் மைக்கேல் கெய்ன் கிறிஸ்டோபர் நோலன் உடன் 8 படங்களில் பணியாற்றியுள்ளார். முக்கியமாக பேட்மேன் டிரைலாஜியில் இவர் ஏற்ற ஆல்ஃப்ரட் கதாபாத்திரம் உலக பேமஸ்!

12.இன்டர்ஸ்டெல்லார் படத்திற்காக சுமார் 500 ஏக்கரில் சோளம் பயிரிட்டுள்ளனர். அதையே அறுவடை செய்து தயாரிப்பு செலவையும் சமம் செய்தவர்.

13. ஓப்பன்ஹெய்மர் படத்தில்தான் முதன்முதலில் ஐமேக்ஸ் கேமராவில் எடுக்கப்பட்ட கறுப்பு வெள்ளை காட்சிகள் இடம்பெற்றன.

14. நோலன் பெரும்பாலும் டிஜிட்டல் கேமராக்களை பயன்படுத்துவதே இல்லை. அதற்குப் பதிலாக செல்லூலாய்டு ஐமேக்ஸ் கேமராவையே பயன்படுத்துகிறார்.

15. பெரும்பாலும் VFX பயன்படுத்தாமலே எடுக்கும் நோலன் டெனட்; படத்தில் வரும் விமானம் விபத்து காட்சிக்கும் உண்மையான விமானத்தையே பயன்படுத்தியுள்ளார்.

கிறிஸ்டோபர் நோலனிடம் நீங்கள் பார்த்து வியந்து விஷயங்களையும், சுவாரஸ்யமான தகவல்களையும் கமென்ட்டில் பதிவிடவும்.

- ஆதவன்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.