Live Wayanad landslide: அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகள்... புதைந்த உயிர்கள்; திரும்பும் பக்கம் எல்லாம் கோரம்
உதவிக்கு வரும் விமானப்படை...!
வயநாடு நிலச்சரிவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பாலங்கள் அடித்து செல்லப்பட்டிருப்பதால், அங்கு மீட்புக்குழுவினர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் விமானப்படை உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது. சூலூர் பகுதியில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் செல்கிறது.
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவுகள்...
வயநாட்டில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர் கனமழையால் வயநாட்டின் பல பகுதிகளிலும் வெள்ள பாதிப்புகளும் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று அதிகாலையில் வயநாட்டின் மூன்று இடங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவுகள் ஒட்டுமொத்த வயநாட்டையும் புரட்டிப் போட்டிருக்கிறது.
சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 12 பேரை சடலமாக மீட்டுள்ளனர். மேலும் பலர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்ற அச்சத்தில் தேடி வருகின்றனர். நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கர நிலச்சரிவு பேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், "நேற்று காலையிலிருந்தே மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது. இடைவிடாது தொடர்ந்து பெய்த மழையில் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது. மழையின் தீவிரத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.

எவ்வளவு பெரிய பாதிப்பு எவ்வளவு பேர் உயிரிழப்பு என்பதை கணக்கிட முடியாத நிலையில் இருக்கிறது. மனித உடல்கள், மரக்குவியல்கள், சிதைந்த வாகனங்கள் என திரும்பும் பக்கம் எல்லாமே கோரமாக இருக்கிறது . ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ உதவி தேவை ப்டுகிறது. நிலச்சரிவு பாதிப்பின் முழு கோரத்தை அறிய இன்னும் சில மணி நேரங்கள் தேவைப்படும் " என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


