`சிறுவயது முதலே IAS தான் அவள் கனவு - பயிற்சி மையத்தை மூழ்கடித்த வெள்ளம்;மகளைப் பறிகொடுத்த குடும்பம்

டெல்லியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில், ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் கணிசமாக இருக்கும் ராஜேந்திரா நகரில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது, ராவ் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திலிருந்த நூலகத்தை 10 முதல் 12 அடியில் வெள்ள நீர் சூழ்ந்ததில், உள்ளே படித்துக்கொண்டிருந்த 20 பயிற்சி மாணவர்கள் தண்ணீரில் சிக்கிக் கொண்டனர்.

உயிரிழந்த மூவர்

இதில், 17 பேர் உடனடியாக மீட்கப்பட்ட போதும், இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் என மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த மூவரில் ஒருவர், பீகாரின் அவுரங்கபாதைச் சேர்ந்த தான்யா சோனி (25). கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் டெல்லியில் தங்கிப்படித்து வந்த தான்யா, அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றுவிட்டு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு ராவ் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகி வந்தார்.

இவரின் தந்தை விஜய் குமார், தெலங்கானாவில் சிங்கரேணி காலீரீஸ் கம்பெனி லிமிடெட் எனும் அரசு நடத்தும் நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரிந்துவருவதால் பெற்றோர் அங்கேயே வசித்துவருகின்றனர். இவ்வாறான சூழலில், தங்களின் மகள் தான்யா சோனி வெள்ளத்தில் மூழ்கி இறந்துவிட்டதாக விஜய் குமாருக்கு இடியாய் செய்தி வந்திருக்கிறது. பின்னர், உடனடியாக விமானத்தில் விரைந்து மகளின் உடலை மீட்டு இறுதிச் சடங்குகளுக்காகச் சொந்த மாநிலமான பீகாருக்கு கொண்டுசென்றார். தனது மகள் குறித்து பேசிய விஜய் குமார், `சிறுவயது முதலே ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்பதே அவளின் கனவு என்று கூறினார்.

தான்யா சோனி

மேலும் அவுரங்காபாத்தில் அவர்களது வீட்டில் தான்யாவின் உறவினர் ஒருவர், `` எங்கள் எல்லோரை விடவும் அவர் கூர்மையானவர். கவிதையை மிகவும் நேசிப்பவர். நடனத்திலும் ஆர்வம் மிகுந்தவர். கல்லூரி நிகழ்ச்சிகளில் கூட நடனமாடியிருக்கிறார்" என்றார்.

ராவ் IAS பயிற்சி மையம்

இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் கண்ணீரில் மூழ்கியிருக்க, டெல்லியில் துணை நிலை ஆளுநரை முற்றுகையிடல், சாலை மறியல் என ஐ.ஏ.எஸ் பயிற்சி மாணவர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மறுபக்கம், ராஜேந்திரா நகரில் சட்டவிரோதமாக 13-க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களை மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.