நாணயம் விகடன் படிப்பதுடன், இனி கேட்டும் அப்டேட் ஆகலாம்...!
பரபரப்பு மிகுந்த இன்றைய வாழ்க்கையில், ஒரு புத்தகத்தை விரித்துப் படிப்பது பலருக்கும் முக்கியமான பிரச்னையாகவே இருக்கிறது. இதற்குக் காரணங்கள் பலப்பல.
அலுவலகத்துக்குச் செல்லும் பயணங்களின் போது பேருந்து, ரயில்களில் புத்தகத்தை விரித்துப் படிக்கும் வாய்ப்பு பலருக்கும் கிடைப்பதில்லை. அலுவலகத்திலும் பரபரப்பான வேலைக்கு நடுவே பத்திரிகைகளை வாசிக்க முடிவதில்லை. சரி, வீட்டுக்கு வந்து நமக்கான ஓய்வு நேரத்தில் படிக்கலாம் என்றால் ஃபேஸ்புக், இன்ஸ்டா, யூடியூப் போன்ற சமூக வலைதளங்களே நம் நேரத்தை தின்றுவிடுகின்றன. இதனால் படிக்க விருப்பம் இருந்தும்கூட வாசிப்பை தொடர்ந்து தள்ளிபோட்டுக்கொண்டே போகின்றவர்கள் அனேகம். இன்னும் சில இளைஞர்களுக்கு போதிய பயிற்சியின்மை காரணமாக வாசிப்பதே சிக்கலாகியிருக்கிறது.
இவர்களுக்கான வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் ஒரு மீடியம்தான், ஆடியோ. மக்கள் அனைவரிடமும் கேட்கும் பழக்கம் வேகமாக வளர்ந்துவருகிறது. சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களைப் பார்ப்பதும், ஆடியோக்களை கேட்பதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை உணர்ந்த விகடன் குழுமம், நாணயம் விகடனை அச்சு இதழ் மற்றும் டிஜிட்டல் வடிவில் வாசிக்கும் வசதியுடன், கேட்டுத் தெரிந்துகொள்கிற ஆடியோ வடிவிலும் நாணயம் விகடனை அளிக்கத் தொடங்கியிருக்கிறது.
இதனை ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை இங்கே மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். நீங்களும் நாணயம் விகடனை ஆடியோவாகக் கேட்க வேண்டுமா?
- விகடன் App-ஐ முதலில் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.
- மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி கொடுத்து Login/Register செய்யுங்கள்.

- புதிய வாசகர் எனில் 30 நாள்களுக்கு இலவச டிஜிட்டல் சந்தாவைப் பெறுங்கள். நடப்பு வாசகர் எனில் நீங்கள் சந்தா செலுத்திய Account-ல் Login செய்யுங்கள்.
- நேரடியாக சந்தா செலுத்த விரும்புபவர்கள் அல்லது Expire ஆன சந்தாவைப் புதுப்பிக்க விரும்புபவர்கள் இங்கே பணம் செலுத்தலாம். Link: https://www.vikatan.com/store
- பின்னர் விகடன் App-ல் நேரடியாக லேட்டஸ்ட் நாணயம், ஜூனியர் அல்லது ஆனந்த விகடன் இதழ்களைத் தேர்வு செய்தால் அங்கே இருக்கும் `Go to Audio Magazine என்ற பகுதிக்குச் சென்று ஆடியோ இதழ்களைக் கேட்கலாம்.
ஒவ்வொரு புதிய இதழ் வெளியாகும்போதும் அதற்கான ஆடியோ இதழும் அத்துடனே வெளியாகும். இதழ்களில் இருக்கும் கட்டுரைகளில் ஒவ்வொன்றாகத் தேர்வு செய்து ஆடியோவாகக் கேட்கலாம். சில கட்டுரைகளைக் கேட்டால் மட்டும் போதாது, படித்தும் பார்க்க வேண்டும் எனில், அதற்கும் அதிலேயே வசதி இருப்பதால், உடனே அந்தக் கட்டுரையைப் படிக்கலாம்.
நாணயம் விகடனை இப்படிக் கேட்டுத் தெரிந்துகொள்வதால், நமக்குக் கிடைக்கும் நன்மைகள் பலப்பல. படிக்கும்போது நம் மூளை 100% ஒத்துழைப்பு தரவேண்டியதுடன், நேரம், சூழல் ஆகியவையும் சாதகமாக, சௌகர்யமாக இருக்க வேண்டும். ஆனால், கேட்பதற்கு நம் மூளை 100% ஒத்துழைப்பு தரவேண்டிய அதே நேரத்தில், நேரம், சூழல் போன்றவையும் முழு சௌகர்யமாக அமைய வேண்டியதில்லை.

உதாரணமாக, காலையில் (பாதுகாப்பாக) வாக்கிங் போகிற நேரத்தில், வீட்டில் காய்கறி நறுக்கும் நேரத்தில், ரிலாக்ஸாக சாப்பிடும் நேரத்தில், அலுவலகத்திற்கான பேருந்து, ரயிலில் பயணிக்கும் நேரத்தில் என எங்கேயும் எப்போதும் கேட்கலாம்.
இதனால் படிக்க விருப்பம் இருந்தும் நாணயம் விகடனை படிக்க முடியவில்லையே என நினைக்கும் சூழல் வராது. நாணயம் விகடனின் அனைத்து கட்டுரைகளும் வழிகாட்டல்களும் எப்போதும் உங்கள் விரல் நுனியில் இருக்கும்.
விகடனின் டிஜிட்டல் சந்தாதாரராக இருப்பின் இன்றே இந்த வசதியைப் பயன்படுத்திடுங்கள். புதிய வாசகர்கள் எனில் இன்றே சந்தாதாரராக இணைந்திடுங்கள். அதற்கான மிகச்சிறந்த தருணம் இதுதான். Link: https://www.vikatan.com/store
இத்தனை நாளும் நாணயம் விகடனைப் படித்துப் பயன் பெற்ற வாசகர்கள், இனி கேட்டும் பயன் பெறலாமே!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


