``வெளிநாடு செல்வோருக்கு இந்த சான்றிதழ் கட்டாயமில்லை.. மத்திய அரசு விளக்கம்!
வெளிநாடு செல்லும் அனைத்து நபர்களுக்கும் வரிச் சான்றிதழ் (Tax Certificate) கட்டாயம் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
வெளிநாடு செல்லும் இந்தியர்கள் வரிச் சான்றிதழ் கட்டாயமாக பெற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்காக, கறுப்புப் பணச் சட்டம் 2015-ல் திருத்தம் கொண்டுவருவதற்கு நிதி அமைச்சகம் நிதி மசோதாவில் (2024) முன்மொழிந்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி, வரி பாக்கி செலுத்த வேண்டியவர்கள் வருமான வரித் துறையிடம் இருந்து வரிச் சான்றிதழ் பெற வேண்டும்.
புதிய விதிமுறையால், வெளிநாடு செல்லும் அனைத்து இந்தியர்களும் வரிச் சான்றிதழ் பெற வேண்டுமா என சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், வெளிநாடு செல்வோர் அனைவருமே வரிச் சான்றிதழ் பெற வேண்டும் என கட்டாயம் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
யாரெல்லாம் வரிச் சான்றிதழ் பெற வேண்டும்?
தீவிர நிதி முறைகேடுகள்:
தீவிரமான நிதி முறைகேடுகள், மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் கட்டாயமாக வரிச் சான்றிதழ் பெற வேண்டும். மேலும், வருமான வரிச் சட்டம் அல்லது செல்வ வரிச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு அவசியமானவர்களும் கட்டாயமாக வரிச் சான்றிதழ் பெற வேண்டும்.
வரி நிலுவை:
10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமான வரி நிலுவைத் தொகை இருந்தால், அவர்களும் வெளிநாடு செல்வதற்கு முன் கட்டாயமாக வரிச் சான்றிதழ் பெற வேண்டும்.
ஆக, வெளிநாடு செல்லும் நபர்கள் தீவிர நிதி முறைகேடுகளில் சந்தேகிக்கப்படவில்லை என்றாலும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வரி நிலுவை இல்லை என்றாலும் வரிச் சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயமில்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


