புதுக்கோட்டை: சிகிச்சைக்கு வந்த சிறுமியிடம் பாலியல் சீண்டல்; மருத்துவர் போக்சோ சட்டத்தில் கைது!
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்தைச் சேர்ந்தவர் அப்துல் மஜித் (வயது: 37). இவர் பல் மருத்துவராக இருந்து வருகிறார். இந்நிலையில், இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக திருவப்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி நேற்று மாலை சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளித்த போது மருத்துவர் அப்துல் மஜித், சிறுமியிடம் பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, இது குறித்து தனது பெற்றோரிடம் கண்ணீரோடு கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், பல் மருத்துவர் அப்துல் மஜித் கைதுசெய்யப்பட்டு அவரிடம் விசாரணை செய்யப்பட்டது. அப்படி, போலீஸார் நடத்திய விசாரணையில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியான நிலையில், மருத்துவர் அப்துல் மஜீத் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னிடம் சிகிச்சைப் பெற வந்த சிறுமி ஒருவரிடம் பல் மருத்துவர் ஒருவர் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட முயன்று போக்சோ சட்டத்தில் கைதாகியுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


