மணிப்பூர் விவகாரம் வெடித்த பின்... முதல்வரை முதன்முறையாகச் சந்தித்த மோடி! - என்ன நடந்தது?
கடந்த ஆண்டு மணிப்பூரில் குக்கி - மைத்தி சமூக மக்களுக்கு மத்தியில் வன்முறைக் கலவரம் வெடித்தது. இதில் 220-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். தற்போதுவரை பதற்றமான சூழலில் இருக்கும் மணிப்பூருக்கு பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்குக் கூட செல்லாதது எதிர்க்கட்சிகளால் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க வடகிழக்கு மாநிலங்களில் பின்னடைவை சந்தித்தது. நாடாளுமன்றக் கூட்டத்திலும் இந்த விவகாரம் விவாதமானது. இந்த நிலையில்தான், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மீது பா.ஜ.க தனி கவனம் செலுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டில் மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து தற்போதைய நெருக்கடிக்கான தீர்வும், மத்திய, மாநிலத்தின் திட்டங்கள் மற்றும் சாலைகள் தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. மணிப்பூர் வன்முறை தொடங்கியதிலிருந்து தற்போதுதான் பிரதமர் மோடி முதன்முறையாக, மணிப்பூர் விவகாரம் குறித்து நேருக்கு நேர் பேச மணிப்பூர் முதல்வரை சந்தித்திருக்கிறார். இந்த கலந்துரையாடலின்போது, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரும் உடன் இருந்ததாகவும், ஆனால் மத்திய, மாநில அதிகாரிகள் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


