ஆதாரில் தமிழக முகவரி; USA பாஸ்போர்ட் - மகாராஷ்டிரா காட்டுக்குள் கட்டிப்போடப்பட்டிருந்த பெண் யார்?!

மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டம் அடர்ந்த வனப்பகுதி, மலைகளை கொண்ட பகுதிகள் ஆகும். மும்பையில் இருந்து 450 கிலோமீட்டர் தூரத்தில் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள சோனுர்லி என்ற கிராமத்தில் வனப்பகுதிக்கு ஆடு மேய்க்க சென்ற ஒருவர் அங்கு பெண் ஒருவர் மரத்தில் கட்டிப்போடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அப்பெண் இரும்பு சங்கிலியால் கட்டிப்போடப்பட்டு இருந்தார். உடனே ஆடு மேய்ப்பவர் இது குறித்து அப்பகுதியில் உள்ள பெரியவர்களிடம் தெரிவித்தார். அவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அப்பெண்ணை மீட்டு சாவந்த்வாடி மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை கொடுத்தனர். அவர் பல நாள்களாக சாப்பிடாமல் விடாது பெய்த மழைக்குள் கிடந்தது தெரிய வந்துள்ளது. அவர் எத்தனை நாட்களாக காட்டுக்குள் இவ்வாறு மரத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்தார் என்ற தகவல் கிடைக்கவில்லை.

அப்பெண்ணிடம் வாக்குமூலம் வாங்க முடியாத அளவுக்கு அவர் மிகவும் பலவீனமாக இருந்தார். அவர் பல நாள்களாக சாப்பிடாமல் இருப்பதால் அவரால் சரியாக பேசக்கூட முடியவில்லை. அவர் சாவந்த்வாடியில் இருந்து மேல் சிகிச்சைக்காக கோவா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடம்பில் ஆங்காங்கே காயம் இருக்கிறது. அப்பெண் மரத்தில் கட்டிப்போடப்பட்ட இடத்தில் அமெரிக்க பாஸ்போர்ட் நகல், தமிழக ஆதார் கார்டு போன்ற ஆவணங்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் கிடைத்த தகவலின் படி அப்பெண்ணிற்கு 50 வயதாகிறது. அதோடு அவரது பெயர் லலிதா என்றும், அவரது அமெரிக்க பாஸ்போர்ட் காலம் முடிவடைந்திருந்ததும் தெரிய வந்தது.

அப்பெண்ணின் கணவர் தமிழ் நாட்டை சேர்ந்தவராக இருக்கவேண்டும் என்றும், அவர்தான் அப்பெண்ணை மகாராஷ்டிரா காட்டிற்குள் கொண்டு வந்து கட்டிப்போட்டுவிட்டு தப்பிச்சென்று இருக்கவேண்டும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். அப்பெண்ணின் உறவினர்களை தேடி தனிப்படை போலீஸார் தமிழ்நாடு மற்றும் கோவாவிற்கு சென்றுள்ளனர். அப்பெண் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அப்பெண் குறித்து வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்திலும் போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர். அப்பெண் வாக்குமூலம் கொடுத்த பிறகுதான் அவரின் உண்மையான நிலவரம் தெரிய வரும். அவர் அமெரிக்காவை சேர்ந்தவர் என்பதால் அமெரிக்க தூதரகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அப்பெண்ணை நேரில் பார்த்த ஆடு மேய்க்கும் நபர் கூறுகையில், ``ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது யாரோ அழும் சத்தம் கேட்டது. உடனே அங்கு சென்ற போது பெண் மரத்தில் இரும்பு சங்கிலியால் கட்டிப்போடப்பட்டு இருந்தார்என்று தெரிவித்தார். ஆவணங்கள் அப்பெண் அணிந்து இருந்த சட்டைப்பையில் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.