Paris Olympics 2024 LIVE Updates: வெளியேறிய ரமிதா... பதக்கத்தை நெருங்கும் மனு, சரப்ஜோத் சிங் ஜோடி!

இறுதிப்போட்டி இன்னும் சில நிமிடங்களில்...

10 மீ ஏர் ரைபிளில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பபுதா இன்னும் சில நிமிடங்களில் களமிறங்கவிருக்கிறார்.

துப்பாக்கிச்சுடுதல் ட்ராப் பிரிவு தகுதிச்சுற்று!

துப்பாக்கிச்சுடுதலின் ட்ராப் பிரிவு தகுதிச்சுற்றில் இந்திய வீரர் பிரித்திவிராஜ் இப்போது ஆடி வருகிறார்.

மற்றொரு பதக்கம் கிடைக்குமா?

கலப்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர்- சரப்ஜோத் இணை தகுதிச்சுற்றில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நாளை நடைபெறவுள்ளது!

மனு பாக்கர்- சரப்ஜோத் இணை

வெளியேறிய ரமிதா!

மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரமிதா ஜிந்தல் 7-வது இடம் பிடித்து வெளியேறினார். இதன்மூலம் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்!

ரமிதா ஜிந்தல்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: இன்று இந்திய வீரர்கள் பங்குபெறும் போட்டிகளின் அட்டவணை...

India At Paris 2024

இரண்டாம் நாள் முடிவில் பதக்கப் பட்டியலில் 22-வது இடத்தில் இந்தியா!

IndiaAtParis2024

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.