What to watch on Theatre and OTT: ராயன், Deadpool & Wolverine, Paradise-இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

ராயன் (தமிழ்)

ராயன்

தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘ராயன்’. தனுஷின் 50வது திரைப்படமான இதில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, செல்வ ராகவன், துஷாரா, அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குடும்பத்தைக் காப்பாற்ற எந்தளவிற்கும் செல்லும் ராயனின் ஆக்‌ஷன் திரில்லர்தான் இதன் கதைக்களம்.

பிதா (தமிழ்)

பிதா (தமிழ்)

சுகன் குமார் இயக்கத்தில் அதேஷ் பாலா, அனு கிருஷ்ணா, சாம்ஸ், ரிஹான பேகம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிதா’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆள் கடத்தல் கும்பலிடம் மாட்டிக் கொள்ளும் தனது அக்காவைச் சிறுவன் காப்பாற்றினானா என்பதுதான் இதன் கதைக்களம்.

Level Cross (மலையாளம்) 

அர்ஃபாஸ் அயூப் இயக்கத்தில் ஆசிப் அலி, அமலா பால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைபடம் Level Cross. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

Purushothamudu (தெலுங்கு)

Purushothamudu

ரோம் பிமனா இயக்கத்தில் ராஜ் தருண், ஹசினி சுதிர், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Purushothamudu’. ரொமாண்டிக், ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

Roopanthara (கன்னடம்)

Roopanthara

மித்திலேஷ் எடவல்த் இயக்கத்தில் ராஜ் பி ஷெட்டி, லேஹா நாயுடு, பரத் ஜிபி உள்ளிட்டோ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Roopanthara’. திரில்லர் திரைப்படமன இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Family Drama (கன்னடம்)

அகார்ஷ் HP இயக்கத்தில் அபாய், பூர்ணாசந்த், சிந்து, அனன்யா அமர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Family Drama’. காமெடிகள் நிறைந்த குடும்பத் திரைப்படமான இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

The UP Files (இந்தி)

நீரஜ் சஹாய் இயக்கத்தில் மனோஜ் ஜோஷி, மன்ஹரி பெட்னிஸ், அலி அஸ்கர், அசோக் சமர்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The UP Files’. உத்திர பிரதேசத்தை மையமாக வைத்து அரசியல் திரில்லர் திரைப்படமாக இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

Deadpool & Wolverine (ஆங்கிலம்)

ஷான் லேவே இயக்கத்தில் ரையான் ரெனால்ட்ஸ், ஹூக் ஜாக்மேன், மொரினா பெக்கரின், மேத்திவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Deadpool & Wolverine’. அட்வன்சர், ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

Bloody Ishq (இந்தி) -  Disney + Hotstar

மகேஷ் பட் இயக்கத்தில் விக்ரம் பட், மனிஷ், சாவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bloody Ishq’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The Ministry Of Ungentlemanly Warfare (ஆங்கிலம்) - Amazon Prime Video

The Ministry Of Ungentlemanly Warfare (ஆங்கிலம்)

கேய் ரிச்சி இயக்கத்தில் பால் தாம்ஸி, எரிக் ஜான்சன், அராஷ் அமெல் உள்ளிட்டோர் எழுத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Ministry Of Ungentlemanly Warfare’. ஹென்றி காவெல், ஆலன் ரிச்சன், அலக்ஸ் பெட்டிபர் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். போர்களத்தில் நடக்கும் ஆக்‌ஷன் திரில்லர், காமெடி கலந்த இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

இந்த வார வெப்சீரிஸ்கள்

சட்னி சாம்பார் (தமிழ்) - Disney + Hotstar

சட்னி சாம்பார்

ராதா மோகன் இயக்கத்தில் யோகி பாபு, வானி போஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் வெப்சீரிஸ் இந்த ‘சட்னி சாம்பார்’. சதாரணமாக ரோட்டில் ஹோட்டல் நடத்தி வரும் யோகி பாபு, பணக்காரரான நிழல்கள் ரவியின் மகன் என்று தெரியவருகிறது. அதன்பின், யோகி பாபு பணக்கார குடும்பத்தின் வீட்டிற்குச் சென்று விடுகிறார். அதன்பிறகு அங்கு என்னவெல்லாம் நடந்தது என்பதுதான் இதன் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The Decameron (ஆங்கிலம்) - Netflix

The Decameron

கேத்லின் ஜோர்டன் இயக்கத்தில் அமர் சத்தா படேல், லெய்லா பர்ஸாட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘The Decameron’. 1348ம் ஆண்டில் நடக்கும் இக்கதை அப்போதைய அதிகாரச் சண்டை, வர்க்கப் பிரிவினை ஆகியவற்றைப் பேசுகிறது. இத்திரைபடம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

Time Bandits (ஆங்கிலம்) - Apple TV+

டெர்ரி கிலியம் இயக்கத்தில் சார்லேனி, டைகா வைட்டிடி, லிசா குட்ரோ, ஜமைஸ் சிலிமன்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Time Bandits’. ஆக்‌ஷன், அட்வன்சர், பேண்டஸி திரைப்படமான இது ‘Apple TV+’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

தியேட்டர் டு ஓடிடி

Weapon (தமிழ்) - Aha

Weapon

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜிவ் மேனன், தான்யா ஹோப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Weapon’. சயின்ஸ் பிக்ஷன் க்ரைம் திரில்லர் திரைப்படமான இது Aha ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Grandma (தமிழ்) - Aha

Grandma

சஜின் லால் இயக்கத்தில் சோனியா அகர்வால், விமலா ராமன் உள்ளிடோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Grandma. ஹாரர், திரில்லர் திரைப்படமான இது Aha ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

காழ் (தமிழ்) - Aha

காழ் (தமிழ்) - Aha

மோகன் ராஜ் இயக்கத்தில் யுகேந்திரன், சித்தார்த் அன்பரசு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Kaazh. தமிழ் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்குப் படிக்க செல்பவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்தான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் Aha ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Paradise (மலையாளம்) - Manorama Max

மெட்ராஸ் டாக்கிஸ் வெளியிட, பிரசன்னா வித்தனகே இயக்கத்தில் ரோஷன் மேத்தீவ், தர்ஷனா ராஜேந்திரன், ஷாம் ஃபெர்னாண்டோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Paradise.

திருமணமான காதல் ஜோடிகள் இலங்கைக்குச் சுற்றுலா செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு நடக்கும் சம்பவங்கள் அவர்களின் வாழ்க்கையையே மாற்றுகின்றன. அதிலிருந்து அவர்கள் எப்படி வெளியே வந்தார்கள். இலங்கை சுற்றுலா அவர்களின் வாழ்வில் எப்படியான புரிதலையும், மாற்றங்களையும் ஏற்படுத்தியது என்பதுதான் இதன் கதைக்களம்.

swakaryam sambhavabahulam (மலையாளம்) - Manorama Max

swakaryam sambhavabahulam

நசீர் பதாருதீன் இயக்கத்தில் ஜோ பேபி, சஜின், அமித் மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் swakaryam sambhavabahulam. கிரமாத்தில் நடக்கும் விறுவிறுப்பான கதையான இது Manorama Max ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Chef Chidambara (கன்னடம்) - Amazon Prime Video

Chef Chidambara

ஆனந்த் ராஜ் இயக்கத்தில் அனிருத்தா ஜெட்கர், ரேச்சல் டேவிட், நிதி சுப்பையா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Chef Chidambara. திரில்லர் திரைப்படமான இது Amazon Prime Video ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Raju Yadav (கன்னடம்) - Aha

Raju Yadav

கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் போடுபல்லி ஶ்ரீனு, அன்கிதா, ஆனந்த சக்ரபானி, நமனி பிரசாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Raju Yadav. காமெடி, ரொமாண்டிக் திரைப்படமான இது Aha ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

yevam (தெலுங்கு) - Aha

yevam

பிரகாஷ் தண்டுலுரி இயக்கத்தில் சந்தினி செளத்ரி, கல்பிதா, ரமேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் yevam. போலிஸ் க்ரைம் திரில்லர் திரைப்படமான இது Aha ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Bharathanatyam (தெலுங்கு) - Aha

Bharathanatyam

KVR மகேந்திரா இயக்கத்தில் சூர்யா தேசாய் அலே, விவா ஹர்ஷா, ஹர்ஷா வரதன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Bharathanatyam. காமெடி, க்ரைம் திரில்லர் திரைப்படமான இது Aha ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Mr. And Mrs. Mahi (இந்தி) - Netflix

Mr. And Mrs. Mahi (இந்தி)

சரண் சர்மா இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், ஜான்வி கபூர், குமுட் மிஷ்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Mr. And Mrs. Mahi. கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் கதாநாயகன், கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று தன்னைப்போலவே குறிக்கோள் கொண்ட பெண்ணைப் பார்த்து காதலில் விழுந்து, அப்பெண்ணின் கிர்க்கெட் கனவை சாத்தியப்படுத்தப் போராடுகிறார். இருவரும் தங்களின் கனவை நோக்கி காதலுடன் பயணிப்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் Netflix ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Bhaiyya Ji (இந்தி) - Zee 5

Bhaiyya Ji (இந்தி) - Zee 5

அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய், விபின் சர்மா, ஜதின் கோஸ்வாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Bhaiyya Ji. ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படமான இது Zee 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Mummies (ஆங்கிலம்) - Netflix

Mummies

ஜுவான் ஜீசஸ் கார்சியா கலோச்சா இயக்கத்தில் ஆஸ்கார் பார்பரன், அனா எஸ்தர் அல்போர்க், லூயிஸ் ரெய்னா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Mummies. ஜாலியான அனிமேஷன் திரைப்படமான இது Netflix ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Which Brings Me to You (ஆங்கிலம்) - Jio Cinema

Which Brings Me to You

பீட்டர் ஹட்சிங்ஸ் இயக்கத்தில் லூசி ஹேல், நாட் வோல்ஃப், ஜான் கல்லாகர் ஜூனியர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Which Brings Me to You. அழகான காதல் திரைப்படமான இது Jio Cinema ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Ghostbusters: Frozen Empire (ஆங்கிலம்) - Netflix

Ghostbusters: Frozen Empire

கில் கெனன் இயக்கத்தில் பால் ரூட், கேரி கூன், ஃபின் வுல்ப்கார்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Ghostbusters: Frozen Empire’. அட்வென்சர், ஃபேன்டஸி திரைப்படமான இது வெளியாகியுள்ளது. Netflix ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.