Zomato: நல்லா மூச்சுகூட விட முடியல- சொமேட்டோ ஊழியர் பகிர்ந்த வீடியோ; உதவ முன்வந்த பெண்!
மகனின் திருமணத்துக்காக 5,000 கோடி செலவு செய்யும் முகேஷ் அம்பானி ஒரு புறம். அதே மும்பையில், மாதம் ரூ.500 வாடகையில் மூச்சுகூட விட முடியாத அளவிற்குக் குறுகலான இடத்தில் வசித்து அன்றாட வாழ்க்கை நடத்தும் மனிதர்கள் மறுபுறம்.
இந்தியாவின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் பிரன்ஜாய் போர்கோயரி. இவர் மாநில அளவிலான கால்பந்து வீரர். நல்ல பாடகரும் கூட. பிழைப்புக்காக மும்பை சென்ற அவர் உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோவில் வேலைப் பார்த்துக்கொண்டு குடிசைப் பகுதியில் ஒரு சிறிய அறையை மற்றொரு நபருடன் பகிர்ந்து வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது அறை குறித்த டூர் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார். அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பிரன்ஜாய் மிகவும் குறுகலான வழி ஒன்றில் செல்கிறார். மிகவும் மெலிந்த உடல் அமைப்பைக் கொண்ட அவரே நேராகச் செல்ல முடியாத அளவிற்கு அந்த இடம் மிகவும் குறுகளாக இருக்கிறது. அந்த குறுகலான வழியின் முடிவில், அதைவிடக் குறுகலான ஒரு இரும்பு படிக்கட்டு இருக்கிறது. அதில் ஏறிச் சென்றால் ஒரு சிறிய அறை இருக்கிறது. இதற்கு மாதம் 500 ரூபாய் வாடகை. சிமென்ட் சீட்டால் மூடப்பட்ட அந்த அறையில் துணிகளும், பொருட்களும், ஒரு பூனைக்குட்டியும் போக மீதமிருந்த இடத்தில் பிரன்ஜாய்யும் அவரது நண்பரும் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு தன்னால் சரியாக மூச்சுகூட விட முடியவில்லை என்று வீடியோவில் மிகுந்த வருத்தத்துடன் பிரன்ஜாய் கூறியிருக்கிறார். அந்த வீடியோவில் மேலும் , "இந்தப் பகுதியில் இப்படிப்பட்ட அறை கிடைப்பதே அதிசயம்தான். என்னால் எங்கள் குடும்பத்திடம் பணம் கேட்க முடியாது. அவர்கள் ஏற்கனவே எனக்காக நிறையச் செலவு செய்துவிட்டார்கள். இந்த அறையில் வசிப்பதற்குப் பூனைக்குச் சிரமமாகத்தான் இருக்கும். வெளியில் விட்டால் அது உயிர் வாழ்வது கடினம்.
View this post on InstagramA post shared by Jist (@jist.news)
எனவே அதை என் செல்லப்பிராணியாக வளர்க்கத் தொடங்கிவிட்டேன்." என்று பேசியிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த இந்த வீடியோ பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்து இருக்கிறது. பலரும் அவரைப் பாராட்டி இருக்கின்றனர். அதில் குஷி என்ற பெண் ஒருவர் அவருக்கு மூன்று மாதம் வீட்டு வாடகையான ரூ.1,500 கொடுத்து உதவி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


