Natarajan: ``கிரிக்கெட்ல அரசியல் எதுவும் இல்ல; பிசிசிஐ எனக்கு வாய்ப்பு தராங்க- நடராஜன்
மதுரையில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்ட நடராஜன் செய்தியாளர் சந்திப்பில் பிசிசிஐ குறித்துப் பேசியிருக்கிறார்.
“பிசிசிஐ எனக்குப் போதுமான வாய்ப்புகளை அளித்து வருகிறது. என்னால்தான் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட முடியவில்லை. உண்மையில் பிசிசிஐ எந்த வீரர்களிடமும் பாகுபாடு மற்றும் ஏற்றத் தாழ்வுகளைப் பார்ப்பதில்லை. கிரிக்கெட்டில் அரசியல் எதும் நடைபெறவில்லை. பிசிசிஐ கொடுத்த அரவணைப்பு மற்றும் ஒத்துழைப்பால்தான் நான் நடராஜனாக வளர்ந்துள்ளேன்.
அடுத்த வாய்ப்பு நேரம் வரும் போது நல்லபடியாக கிடைக்கும். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்று சிறப்பாக விளையாடி உள்ளேன். ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு ரசிகர்கள் அதிகம் பார்க்கும் கிரிக்கெட் போட்டியாக டி.என்.பி.எல் போட்டி மாறி இருக்கிறது. டி.என்.பி.எல் போட்டியில் தமிழகத்தில் இருந்து 15 கிரிக்கெட் வீரர்கள் உருவாகியுள்ளனர்.
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கிராமப்புற வீரர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. டி.என்.பி.ல் கிரிக்கெட் தொடக்கத்தை விட தற்போது முன்னேற்றம் அடைந்திருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இளைஞர்கள் கடின உழைப்பால் உயர்ந்த நிலைக்குச் செல்லலாம், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு பெற்றோர்கள் ஊக்கம் அளிக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

பிறகு சினிமாவில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், " மீடியா முன் பேசுவதற்கே தயக்கமாக இருக்கிறது. பின்னர் எப்படி சினிமாவில் நடிப்பேன், சினிமாவில் நடிக்க வாய்ப்பே இல்லை" என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


