ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் தொடர் விசாரணை...மேலும் ஒருவர் கைது

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக பதிவு செய்ததாக கரூர் சார்-பதிவாளர் அளித்த புகாரின் பேரில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 22-ம் தேதி கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரை இரண்டு நாள் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த இரண்டு நாள் விசாரணை முடிந்த நிலையில், மீண்டும் கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

பிரகாஷ்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஏற்கனவே தொழிலதிபர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வாங்கல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், வாங்கல் காவல் நிலைய போலீஸார் நீதிபதியிடம் ஏழு நாள் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். ஆனால், நீதிபதி பரத்குமார் ஒரு நாள் மட்டும் வாங்கல் காவல் நிலைய போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் ஏற்கனவே அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போலி ஆவணம் வழங்கிய வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பிரிதிவிராஜ், பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சார்லி என்பவரையும் தற்போது கைது செய்துள்ளனர். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது அடுத்தடுத்து விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது, அ.தி.மு.க-வினர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.