முதலீட்டில் ரிஸ்க் இல்லாத லாபம் பார்க்க முடியுமா? கோயமுத்தூர் முதலீட்டாளர்களே மறக்காம வந்துடுங்க..!

சம்பாதிக்கிறதெல்லாம் செலவுக்கே சரியா இருக்கே... இதுல எங்க சேமிக்கிறது, முதலீடு செய்றதுங்குற கவலை பெரும்பாலானவங்களுக்கு இருக்கு. இருந்தாலும், அதிகரிச்சுட்டே வர்ற இந்த விலைவாசி ஏற்றத்துக்கு இடையிலையும், பிள்ளைங்களோட படிப்புக்காக, அவங்களோட கல்யாணத்துக்காக  அரும்பாடு பட்டு உழைச்சு எப்படியாச்சும் நாலு காசு சேர்த்துடணும்னு  பெத்தவங்க நினைப்பாங்க.

வீட்டு உண்டியல்ல, வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ் ஆர்.டியில மாசாமாசம் பணத்தை சேமிக்கிறதால மட்டும் விலைவாசிக்கு தக்கபடி லாபத்தை எடுக்க முடியாது. மியூச்சுவல் ஃபண்ட்ல முதலீடு பண்ணனும். அப்போதான் எந்த தேவைக்காக முதலீடு பண்றோமோ அதுக்கான காசு லாபத்தோட கிடைக்கும்.

எதிர்காலத் தேவைகளுக்காக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எப்படி ஆரம்பிக்கிறது, எந்த இலக்குக்காக எதுல எதுல எவ்வளவு முதலீடு பண்றது, எந்த டெக்னிக்கை ஃபாலோ பண்ணா இலக்குகளை சீக்கிரமா அடையலாம் அப்படிங்குற விஷயங்களை சொல்லிக்கொடுக்குற இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு! விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாணயம் விகடனும், மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைஞ்சு நடத்துறாங்க.

வர்ற ஜூலை 27-ம் தேதி சனிக்கிழமை மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஹோட்டல் விஜய் எலன்சா ஹோட்டல்ல இந்த நிகழ்ச்சி நடக்குது.  இதுல பங்கேற்க கட்டணம் எதுவும் கிடையாது.  ஆனா https://bit.ly/miraeassetMF இந்த லிங்கை கிளிக் பண்ணி கட்டாயம்  முன்பதிவு  பண்ணனும்.

இந்த நிகச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக நிதி நிபுணர் சுந்தரி ஜெகதீசனும், மிரே அஸெட் நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைமை மேலாளர் கோபிநாத் சங்கரனும் கலந்துக்குறாங்க. உங்களுடைய மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த சந்தேகங்களுக்கு இந்தக் கூட்டத்தில் பதில் கிடைக்கும். மறக்காம வந்துடுங்க...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.