பாலியல் வழக்கில் கைதான மனைவி; தட்டிக்கேட்ட கணவர் கொலை - சென்னையில் கொடூரம்
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கௌஷபாஷா (48). இவருக்கு ஷாஜிதா பானு என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 28-ம் தேதி கௌஷபாஷா வீட்டில் இறந்து கிடந்தார். சர்க்கரை நோய் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட உடல் நலக்குறைவால் கௌஷபாஷா இறந்து விட்டதாக குடும்பத்தினருக்கு அவரின் மனைவி ஷாஜிதாபானு தகவல் தெரிவித்தார். இந்தநிலையில் கௌஷபாஷாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் குடும்பத்தினர் சந்தேகத்தை எழுப்பினர்.
இதையடுத்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மேலும், கௌஷபாஷாவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் கௌஷபாஷாவின் கழுத்து நெரிக்கப்பட்டு அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்தத் தகவல் கிடைத்ததும் போலீஸார் கௌஷபாஷாவின் மனைவி ஷாஜிதாபானுவிடமும் அவரின் குழந்தைகளிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து வில்லிவாக்கம் போலீஸார் கூறுகையில், ``கௌஷபாஷாவின் மனைவி ஷாஜிதாபானு பாலியல் வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்திருக்கிறார். பின்னர் அந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த ஷாஜிதாபானு வீட்டுக்கு வந்திருக்கிறார். அதுதொடர்பாக சம்பவத்தன்று ஷாஜிதாபானுவுக்கும் அவரின் கணவர் கௌஷபாஷாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஷாஜிதாபானு, துப்பட்டாவால் கௌஷபாஷாவின் கழுத்தை நெரித்திருக்கிறார். இதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த ஷாஜிதாபானு, உடல்நலக்குறைவால் கணவர் உயிரிழந்துவிட்டதாக கதறி அழுது குடும்பத்தினரை நம்ப வைக்க நாடகமாடியிருககிறார். ஆனால் கௌஷபாஷாவின் கழுத்திலிருந்த காயங்களைப் பார்த்த அவரின் உறவினர்கள் எழுப்பிய சந்தேகம் மற்றும் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டால் ஷாஜிதாபானு வசமாக சிக்கிக் கொண்டார். தற்போது கணவரைக் கொலை செய்த குற்றத்துக்காகவும் ஷாஜிதாபானு கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


