சென்னை: ரேடியோ சத்ததால் தகராறு... வாட்ச்மேனைக் கொலை செய்த ஆட்டோ டிரைவர்

கன்னியாகுமரி மாவட்டம், பள்ளிப்பாடி, நேசர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் தம்பிராஜ் (61). இவர் சென்னையில வாட்ச்மேனாக வேலை செய்து வந்தார். இதற்காக சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள மேன்ஷனில் தங்கியிருந்தார். இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த அய்யனாரும் (60) அதே மேன்ஷனில் தங்கியிருந்தார். இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 22-ம் தேதி ஆட்டோ டிரைவர் அய்யனார், ரேடியோவில் அதிக சத்தத்துடன் பாட்டுக் கேட்டிருக்கிறார். அதனால் சத்தத்தைக் குறைக்கும்படி வாட்ச்மேன் தம்பிராஜ் கூறியிருக்கிறார்.

கைது

அதற்கு அய்யனார், `நல்ல பாட்டு, என்னால் சத்தத்தை குறைக்க முடியாது’ என்று பதிலளித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் அய்யனார் அருகில் கிடந்த உருட்டுக் கட்டையை எடுத்து வாட்ச்மேன் தம்பிராஜை தாக்கியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த தம்பிராஜ், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியுள்ளார். தம்பிராஜின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தம்பிராஜ் உயிரிழந்தார். இதையடுத்து திருவல்லிக்கேணி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து ஆட்டோ டிரைவர் அய்யனாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.