நீலகிரி: 10 நாள்களுக்கு மேலாக தொடரும் கனமழை; அடுத்தடுத்து சரியும் மரங்களால் அச்சத்தில் மக்கள்!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. வறண்டிருந்த அணைக்கட்டுகள் அனைத்தும் அசுர வேகத்தில் நிரம்பி வருகின்றன. ஊட்டி, குந்தா, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் மழைப்பொழிவு தொடர்ந்து வருகிறது. காற்று மற்றும் மழை காரணமாக மாவட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.

போலீஸ் ஸ்டேஷன் மீது விழுந்து மரம்

நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சத மரங்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. அடுத்தடுத்து சரியும் ராட்சத மரங்களால் பல பகுதிகளிலும் போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின் விநியோகம் தடைபட்டிருக்கிறது. கொட்டும் மழையிலும் சீரமைப்பு பணிகளில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். விளைநிலங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. காற்று, மழையின் தீவிரம் குறையாத நிலையில், மரங்களாலும் மண்சரிவாலும் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் நீடிக்கிறது.

மழை பாதிப்பு குறித்து வருவாய்த்துறையினர், "எதிர்பாராத அளவிற்கு மழை தொடர்ந்து பெய்து வருகிறது. பலத்த காற்றும் வீசி வருகிறது. மக்கள் பாதுகாப்பாக இருக்க தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். மழையால் வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கி வருகிறோம். முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண உதவிகள் தொடர்பாக அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறோம்.

சாலையில் விழுந்த மரம்

ஆபத்தான நிலையில் உள்ள ராட்சத மரங்களை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் மற்றும் குடிநீர் தடங்கல்களை சரி செய்து வருகிறோம் . மக்களை மீட்க குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீட்பு முகாம்களும் தயார் நிலையில் உள்ளன " என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.