VCK: மறுசீரமைக்கப்படும் கட்சிப் பொறுப்புகள்... மாற்றத்துக்கு தயாராகும் வி.சி.க?!

ஜூலை 20, 21 ஆகிய தேதிகளில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தை இணைய வழியில் சத்தமில்லாமல் நடத்தி முடித்திருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வரும் நிலையில், அங்கே விவாதிக்கப்பட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விசாரித்தோம்.

நம்மிடம் பேசிய தென்மாவட்ட நிர்வாகிகள் சிலர், ``மா.செ கூட்டத்தை டெல்லியில் இருந்தபடியே நடத்தி முடித்திருக்கிறார் எங்கள் தலைவர் திருமாவளவன். அதில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. முதன்மையாக கட்சியை மறுசீரமைக்கும் பணிகளில் கவனம் செலுத்தவிருக்கிறோம்.

திருமாவளவன்

ஏற்கனவே இருக்கும் 144 மாவட்டச் செயலாளர் எண்ணிக்கையை நிர்வாக வசதிக்காக மேலும் அதிகப்படுத்தி தொகுதிக்கு ஒரு மா.செ-வை நியமிக்கலாமா என்கிற ரீதியில் ஆலோசனை நடந்தது. மிக விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ முடிவுகளை கட்சி தலைமை அறிவிக்கலாம். இதற்கிடையில் ஏற்கனவே பதவி வகிக்கும் 144 மா.செ-க்களில் முறையாக செயல்படாதோர் மீது நடவடிக்கையும் பாயலாம்” என்றனர்.

வி.சி.க துணைப் பொதுச் செயலாளர்கள் சிலர் பேசுகையில், ``கூட்டத்தில் மா.செ-க்கள் பொறுப்பு குறித்து பேசியதோடு, இரண்டு பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும் பேசப்பட்டது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 17-ம் தேதி எங்கள் தலைவர் திருமா-வின் பிறந்தநாள் வருவதால், அதோடு சேர்த்து மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்றதையும் இணைத்து கொண்டாட திட்டமிட்டுள்ளோம். மேலும் மதுவிலக்கு கோரிக்கையை வலியுறுத்தி வி.சி.க நடத்தும் மகளிர் மாநாடு நடத்துவது தொடர்பாகவும் பேசப்பட்டது” என்றனர்.

`வெல்லும் சனநாயகம்’ மாநாடு

2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் நியமித்து, பூத் கமிட்டி வரை வலுப்படுத்தும் வேலைகளை வி.சி.க தொடங்கியிருக்கிறது. கட்சி பொறுப்புகள் மறுசீரமைக்கப்படும் என்ற அறிவிப்பு வி.சி.க-வினர் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.