Union Budget 2024-25:ரூ.5000 ஊக்கத்தொகை; 500 நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப்- கல்வி தொடர்பான அறிவிப்புகள்

2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்யும் 7வது பட்ஜெட் இது. ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் என்ற 4 இலக்குகளை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார். இந்த பட்ஜெட்டில் கல்வி தொடர்பான சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

Education

* கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக இந்தாண்டு 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

* உள்நாட்டு கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட உள்ளது.

* நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்கு சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்பட உள்ளன.

*500 முன்னணி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 5 கோடி இளைஞர்கள் இன்டர்ன்ஷிப் செய்வதற்கான திட்டம் செயல்படுத்தப்படும். இதில் இன்டர்ன்ஷிப் மேற்கொள்பவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும். பயிற்சி செலவுகளை நிறுவனங்கள் அவற்றின் CSR ஒதுக்கீட்டிலிருந்து மேற்கொள்ள வேண்டும்.

*முத்ரா கடன் தொகை வரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டடுள்ளது.

Youngsters

*புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத அரசு ஊதியம் வழங்கப்படும்.

*EPFO பதிவு செய்த இளைஞர்களுக்கு ரூ.15,000 முதல் 1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

*இந்தத் திட்டத்தில் மாத ஊதியம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்கும் இளைஞர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000 வரை நேரடியாக வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளாகச் செலுத்தப்படும். இந்தத் திட்டத்தில் 2.1 கோடி இளைஞர்கள் பலன் அடைவார்கள்" என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.