Sushmita Sen: 18 வயதில் அந்த வார்த்தையைச் சொல்லக்கூடாது என்று கண்டித்தார்கள்... - சுஷ்மிதா சென்
1996-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான Dastak என்னும் படம் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமானவர் சுஷ்மிதா சென்.
1997-ல் நாகர்ஜூனாவிற்கு ஜோடியாக ரட்சகன் என்னும் படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். தற்போது சுஷ்மிதா சென்னுக்கு 46 வயதாகிறது. இதுவரை அவர் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். எனவே தனது இரண்டு பெண் குழந்தைகளை வளர்ப்பதில் தனது முழுநேரத்தையும் செலவிட்டு வருகிறார். இதனால் முன்புபோல திரைப்படங்களில் நடிப்பதில்லை.
நீண்ட நாள்களுக்குப் பிறகு Taali படத்தில் நடித்திருந்தார். இப்படம் மும்பையைச் சேர்ந்த சமுக ஆர்வலர் மற்றும் திருநங்கைகளின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் கௌரி சாவந்த் (Gauri Sawant) என்ற திருநங்கையின் வாழ்கை வரலாற்றுப் படமான இது கடந்த 2023-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் சமீபத்திய நேர்காணல்களில் தனது தனிப்பட்ட வாழ்கைக் குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்து வரும் சுஷ்மிதா சென், "நான் 18 வயதாக இருக்கும்போது செக்ஸ் என்ற வார்த்தையைத் தெரியாமல் சொல்லிவிட்டேன். அதற்காக என் பெற்றோர்கள் என்னை கண்டித்து, அந்த வார்த்தையையெல்லாம் சொல்லக் கூடாது என்றார்கள். ஆனால், இப்போது அப்படியில்லை. காலம் மாறிவிட்டது. எல்லோரும் எல்லாவற்றையும் சிறு வயதிலேயே தெரிந்து கொள்கின்றனர். அதை நாம் குறை சொல்லவும் முடியாது.

ஆனால், இப்போது இந்த நேர்காணலில் செக்ஸ் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு, அது பற்றிப் பேசியாக வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படிப் பட்ட சூழலில் நாம் இருக்கிறோம். இதுபோன்ற சில விஷியங்களை நாம் தயக்கமின்றி உரையாட வேண்டும். அப்போதுதான் இதுகுறித்தத் தெளிவும், விழிப்புணர்வும் நமக்கு வரும். உலக அழகியாக வேண்டும், உலகத்திலே நாம்தான் அழகாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் என் வாழ்நாள் நோக்கமில்லை. சுதந்திரமாக மனிதராக இந்த சமூகத்தில் இருப்பதுதான் என் வாழ்நாள் நோக்கம் என்று கருதுகிறேன். " என்று பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


