இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் - மத்திய அரசு குறைத்து காட்டியதா?!
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டது. பிறகு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. பொதுமுடக்கத்தால் அத்தியாவசிகள் தேவைகளை கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவித்தனர். இதனால் கொத்து கொத்தாக மக்கள் மடிந்து போனார்கள். இறுதியாக 5.9 மில்லியன் இறப்புகள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பிறகு வெளியான தி லேன்செட் ஆராய்ச்சி இதழ் இதை முற்றிலும் மறுத்தது.
அதாவது அதிகாரபூர்வ பதிவுகளில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது 1,00,000 பேருக்கு 120 இறப்புகள் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அதாவது, 2020 முதல் 2021 இறுதிவரையிலான இரண்டு ஆண்டுகளுக்கிடையில், 1 கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமானோர் (18.2 மில்லியன்) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்ட 5.9 மில்லியன் இறப்புகளை விட இது மூன்று மடங்கு அதிகமாகும் என சொல்லப்பட்டு இருந்தது.
இந்த சூழலில்தான் இந்தியாவிலும் அரசு தெரிவித்ததைவிட 8 மடங்கு உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட 11.9 லட்சம் உயிரிழப்புகள் அதிகம் பதிவாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக சமத்துவ டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரன், "உலகம் முழுவதும் எல்லா நாடுகளும் இறப்பு விகிதத்தை குறைவாகவே தெரிவித்தார்கள். ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி செய்யும் அரசு சிறப்பாக செயல்பட்டதாக மக்களிடம் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இவ்வாறு தவறான தகவல்களை தெரிவித்தனர். ஆனால் இந்தியா அரசு பிற நாடுகளை மிஞ்சும் அளவுக்கு பொய் பேசியது. டெல்லியில் மயானத்தில் பிணங்களை எரிக்க மக்கள் வரிசையில் நின்றார்கள். 24 மணி நேரமும் பிணங்கள் எரிக்கப்பட்டன. கங்கை நதியில் பாதி பிணங்கள் புதைக்காமல் கிடந்ததை பார்க்க முடிந்தது.
மேலும் முந்தைய ஆண்டுகளில் நடந்ததைவிட கொரோனா காலத்தில் உயிரிழப்புகள் மிகவும் அதிகமாக இருந்தததை பார்க்க முடிந்தது. ஆனாலும் மோடி அரசு மிகப்பெரிய பொய், பித்தலாட்டம் பேசியது. ஆகவே உண்மையாக இறந்தவர்களில் விவரத்தை அரசு வெளியிட வேண்டும். தாய், தந்தையை இழந்த குழந்தைகளில் கல்வி செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ மணியாளர்கள் பலரும் இறந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத காரங்களை சொல்லி இழப்பீடு கொடுக்காமல் அரசு மவுனம் சாதித்து வருகிறது. எனவே உடனடியாக அத்தகைய மருத்துவ பணியாளர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். இதில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
ஆனால், இந்த ஆய்வு முடிவுகளை, ஏற்க கூடியது இல்லை. மேலும் பல்வேறு குளறுபடிகளும் இருக்கிறது என மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு மறுத்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வினோத் பவுல், "இந்த ஆய்வில் பல குளறுபடிகள் உள்ளன. எனவேதான் ஆய்வாளர்கள் தவறான முடிவுக்கு வந்துள்ளனர். மேலும், இந்தியாவின் சிவில் பதிவேடு அமைப்பில் 99% உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டன. இந்தியாவில் 2019-ம் ஆண்டை ஒப்பிடும் போது 2020-ல் 4.74 லட்சம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. எனவே 11.99 லட்சம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது" என தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


