மதுரை ரெளடியுடன் அறிமுகம்; சிறுவன் கடத்தல்... கணவர் வீட்டுமுன்னே தற்கொலை செய்த குஜராத் IAS-ன் மனைவி
குஜராத்தில் மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளராக இருப்பவர் ரஞ்சித் குமார் ஐ.ஏ.எஸ். இவரின் மனைவி சூர்யா. சூர்யாவுக்கும், அவரின் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் திடீரென சூர்யா குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு சென்றார். இது குறித்து ரஞ்சித் குமாரின் ஊழியர்கள் அவருக்கு தகவல் கொடுத்தனர். அந்நேரம் ரஞ்சித் குமார் வீட்டில் இல்லை. தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெறுவது தொடர்பான விவகாரத்தில் வெளியே சென்று இருந்தார். ரஞ்சித் குமார் தனது மனைவியை உள்ளே விட வேண்டாம் என்று தனது ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரை உள்ளே விட ஊழியர்கள் மறுத்துள்ளனர்.
எனினும் வீட்டிற்குள் செல்ல சூர்யா தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால் முடியவில்லை. இதனால் தனது கணவர் வீட்டு முன்பாக சூர்யா விஷம் குடித்துவிட்டார். உடனே அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் ஆனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். சூர்யா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அக்கடிதத்தை போலீஸார் கைப்பற்றி இருக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் அதிகாரி ரவி தேஜா குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அதிகாரி ரவி தேஜா கூறுகையில், தற்கொலை செய்து கொண்ட பெண் எழுதி இருக்கும் கடிதம் கிடைத்திருக்கிறது. அதில் என்ன எழுதி இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள இன்னும் கடிதம் மொழிபெயர்க்கவில்லை. அது மொழி பெயர்க்கப்பட்டால்தான் தற்கொலைக்கான காரணம் தெரிய வரும். ஆனால் அப்பெண்ணுக்கு மதுரையில் சிறுவனை கடத்திய வழக்கில் தொடர்பு இருப்பதால் இந்த விபரீத முடிவை எடுத்திருப்பதாக சந்தேகிக்கிறோம் என்றார்.

போலீஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்து இருக்கிறது. சூர்யா கடந்த 9 மாதத்திற்கு முன்பு மதுரையை சேர்ந்த ரெளடி ஐகோர்ட் மகாராஜா என்பவருடன் கிடைத்த அறிமுகத்தை அடுத்து, மதுரை சென்றதாக தெரிகிறது. அதன் பிறகு சூர்யாவுடன் விவாகரத்து செய்ய அவரது கணவர் முயற்சி மேற்கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில் ஐகோர்ட் மகாராஜாவும் அவனின் கூட்டாளியும் சேர்ந்து மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த 14 வயது சிறுவனை கடத்தி இருந்தனர். அச்சிறுவனின் தாயாருடன் இருந்த பணப்பிரச்னை தொடர்பாக அவர்கள் கடத்தினர். அச்சிறுவனின் தாயாரிடமிருந்து 2 கோடி கொடுத்தால்தான் சிறுவனை விடுவிப்போம் என்று கூறி மிரட்டினர். ஆனால் சிறுவனின் தாயார் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விரைந்து செயல்பட்டு சிறுவனை மீட்டனர். ஆனால் குற்றவாளிகள் தப்பித்துவிட்டனர். இந்த விவகாரத்தில் சூர்யாவின் பெயரும் அடிபட்டது. ஐகோர்ட் மகாராஜா இக்கடத்தலில் தொடர்பு கொண்டு இருப்பதால் சூர்யாவையும் இவ்வழக்கில் போலீஸார் சேர்த்துள்ளனர்.
.jpeg)
இதனால் போலீஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக சூர்யா நேராக குஜராத்தில் உள்ள தனது கணவன் வீட்டிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் சூர்யாவை அவரது கணவர் வீட்டிற்குள் விட வில்லை. எனவே கணவன் வீட்டின் முன்பாக ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விஷத்தை குடித்துவிட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்கொலை செய்து கொண்ட சூர்யாவுக்கு 45 வயதாகிறது. அவருக்கும் ரஞ்சித் குமாருக்கும் இடையே இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மகன்களை விட்டுவிட்டுத்தான் தனது சொந்த ஊரில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023 - Part 01 ஐ காண
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


