கிருஷ்ணகிரி: கடன் தொல்லை... இரண்டு பெண் குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட தாய்
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சின்னபர்கூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். கல் உடைக்கும் தொழிலாளி. இவரின் மனைவி உஷா, இவர்களின் மகள்கள் நிவேதா, ஷர்மிளா. இவர்கள் பர்கூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், முறையே 12-ம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பயின்று வந்தனர். இந்நிலையில் ரமேஷுக்கு போதிய வருவாய் இல்லாததால் குடும்பத்தினர் கடன் பிரச்னையில் அவதிப்பட்டு வந்துள்ளனர். குறிப்பாக மகளிர் சுய உதவி குழுவில் நேற்று 5 ஆயிரம் பணம் கட்ட வேண்டிய நிலையில் பலரிடம் கடன் கேட்டுள்ளனர்.
எங்கும் கிடைக்காததால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அத்துடன் அடிக்கடி இவர்களுக்குள் குடும்பத் தகராறும் இருந்து வந்துள்ளது. இதையடுத்து ரமேஷ் பெங்களூரில் உள்ள தனது தம்பி கணேசனை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளார். அப்போது வீட்டில் அதிக கூச்சல் இருந்ததால், அவர் போனை துண்டித்துள்ளார். இது குறித்து பர்கூரில் உள்ள தனது தந்தை காத்தவராயனை தொடர்பு கொண்டு கணேசன் அண்ணன் வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அப்போது காத்தவராயன் ரமேஷை தொடர்பு கொண்ட போது, `எனக்கு வாழவே பிடிக்கவில்லை, நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்’ எனக் கூறி போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
பின்னர் அவர் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று பணம் ஏதும் கிடைக்குமா என கேட்க சென்று விட்டார். மகன் தற்கொலை செய்யப் போவதாக கூறியதால் அதிர்ச்சியடைந்த காத்தவராயன் உடனடியாக மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டிற்குள் மருமகள் உஷா, பேத்திகள் நிவேதா, ஷர்மிளா ஆகியோர் தூக்கு போட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். கதறி துடித்த அவர் பர்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் மூலம் சம்பவம் இடம் வந்த பர்கூர் போலீஸார், இறந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு மாயமான ரமேஷை போலீஸார் நேற்று மதியம் கண்டுபிடித்து அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, "கடன் தொல்லையால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு உஷா தனது மகள்களுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.