`போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள்..!’ - சேலம் மண்டலத்தில் 40 மருந்து கடைகள் மீது வழக்கு!

சேலத்தில் போதைக்காக, வலி நிவாரணி மாத்திரைகள், தூக்க மாத்திரைகளை இளைஞர்கள் சிலர் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. அதேபோல் ஒரு சில மருந்து கடைகளில் வலி நிவாரணி மருந்துகள் அதிக அளவு வாங்கப்பட்டு உரிய ரசீதுகள் இன்றி விற்பனை செய்யப்படுவதும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. இதனால் சேலம் மாநகர போலீஸார் உடன் இணைந்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 26-ம் தேதி செவ்வாய்பேட்டை போலீஸார் சேலம் நான்கு ரோடு பகுதியில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த செவ்வாய்பேட்டை பெரியார் நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, வீரபாண்டி ராஜவீதியை சேர்ந்த அர்ஜூணன், மொத்த டீலர் ரமேஷ், மருத்துவ விற்பனை பிரதிநிதி சாமிநாதபுரத்தை சேர்ந்த சுப்ரமணி, கிச்சுப் பாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த தரன், அரியனூரில் மெடிக்கல் நடத்தி வரும் மல்லூர் வேங்கம்பட்டியை சேர்ந்த நிர்மல்ராஜ், குரங்குச்சாவடியை சேர்ந்த கரன் ஆகியோரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

கைது

அவர்களிடமிருந்து போதைக்காக பயன்படுத்தப்பட்ட 1,100 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதனிடையே சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகள் மொத்த மருந்து கடைகளை அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும் வலி நிவாரணி மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரை சீட்டு இன்றி வழங்குவதை தடுக்கும் வகையில் போதை தடுப்பு பிரிவு போலீஸாருடன் இணைந்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் சரகத்தில் கடந்த ஆறு மாதத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 40 மருந்து கடைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.