பரபரப்பான சாலையில் மக்கள் கண்முன்னே YSRCP நிர்வாகி வெட்டிக் கொலை - வீடியோவால் சிக்கிய குற்றவாளி
ஆந்திரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேசக் கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. அதைத் தொடர்ந்து, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டின் முன்னால் இருந்த கட்டடத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது தொடங்கி, ஜெகன் மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது வரை பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்த ஷேக் ரஷீத், நேற்று இரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தின் பரபரப்பான சாலையான வினுகொண்டா நகர் சாலையில், பொதுமக்கள் கண்முன்னே வெட்டிக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தரப்பு வெளியிட்டிருக்கும் தகவலில்,``நேற்று இரவு சுமார் 8:30 மணியளவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்த ஷேக் ரஷீத், சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது ஷேக் ஜிலானி என்பவரால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஷேக் ரஷீத்தின் இரு கைகளும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. ஷேக் ஜீலானி கொலை செய்யும்போது அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருக்கின்றனர். அதன் அடிப்படையிலும், சாட்சிகளின் அடிப்படையிலும் ஷேக் ஜீலானி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தற்போதுவரை முதல்கட்ட விசாரணையில், இந்த கொடூரமான கொலைக்கான காரணம் தனிப்பட்ட விரோதமாக இருக்கலாம் என்றே கருதுகிறோம். இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதற்கான ஊகங்களை திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இந்த சம்பவம் நடந்த வினுகொண்டா நகரம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அமைதியை சீர்குலைக்கும் எந்த முயற்சிகளுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


