விவசாயியை துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கு... சர்ச்சை பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரி பூஜாவின் தாயார் கைது!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பயிற்சி ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேட்கர் பணியில் சேரும் முன்பு பல்வேறு சலுகைகள் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தவிர பூஜா பார்வைக்குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி என்று கூறி சான்றிதழ் கொடுத்து இட ஒதுக்கீடு மூலம் பணியை பெற்றுள்ளார். ஆனால் அவர் இதற்கான சோதனையில் கலந்து கொள்ள வில்லை. இதனால் அவரின் சான்றிதழில் சந்தேகம் எழுந்துள்ளது.

புனேயில் இருந்து வாசிம் இடமாற்றம் செய்யப்பட்ட பூஜா, இப்போது அப்பணியில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை முசோரியில் உள்ள ஐ.ஏ.எஸ்.பயிற்சி அகாடமியில் மீண்டும் ஆஜராகும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் பூஜாவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி என்று சொன்னது பொய் என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் பணியில் இருந்து நீக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூஜா மட்டுமல்லாது அவரின் பெற்றோரும் இப்போது சர்ச்சையில் சிக்கி இருக்கின்றனர்.

பூஜாவின் தாயார் மனோரமா, தங்களது சொந்த கிராமத்தில் நிலப்பிரச்னையில் விவசாயியை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மனோரமா மற்றும் அவரின் கணவர் திலிப் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீஸார் தேடி வந்தனர். தற்போது பூஜாவின் தாயார் மனோரமா மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ராய்கட் கோர்ட்டை அருகே லாட்ஜ் ஒன்றில் மனோரமா பதுங்கி இருந்தார். அவரை போலீஸார் இன்று காலையில் கைது செய்தனர். அவர் புனே அகமத் நகர் கொண்டு வரப்பட்டுள்ளார். விவசாயுடன் நிலப்பிரச்னை குறித்து விவாதித்துக்கொண்டிருந்த போது மனோரமா கையில் இருந்த துப்பாக்கி காட்டி மிரட்டினார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. துப்பாக்கியால் மிரட்டப்பட்ட விவசாயி இது தொடர்பாக போலீஸில் புகார் செய்ததை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

மனோரமாவின் கணவர் திலிப், தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். திலிப் மகாராஷ்டிரா மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் முக்கிய பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். அவர் பணியில் இருந்த போது ஊழல் செய்ததாக இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்ட விபரம் இப்போது தெரிய வந்துள்ளது. 2015-ம் ஆண்டு திலிப் தேவையில்லாமல் மிரட்டி பணம் பறிப்பதாக சிறு தொழிலதிபர்கள் 300 பேர் திலிப்பிற்கு எதிராகபுகார் செய்தனர். 2018-ம் ஆண்டு கோலாப்பூரில் திலிப் பணியாற்றிய போது மரக்கம்பெனி உரிமையாளர்கள் திலிப் தண்ணீர் மற்றும் மின் இணைப்பை மீண்டும் வழங்க 50 ஆயிரம் வரை லஞ்சம் கேட்பதாக புகார் செய்திருந்தனர். இது போன்ற காரணத்தால் பணியில் இருந்த போது இரு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரங்கள் எல்லாம் இப்போது, மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.