வீடுகளில் திடீர் விரிசல், தொடர் மண்சரிவு, சுற்றுலாவுக்கு தடை நீட்டிப்பு - நீலகிரியில் தொடரும் கனமழை!

நீலகிரியில் கடந்த 4 நாள்களாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. முழு கொள்ளளவை எட்டிய குந்தா உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரி நீரை வெளியேற்றி வருகின்றனர். கரையோர மக்களுக்கு வெள்ள‌ அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம்

மழையின் தீவிரம் காரணமாக ஆறுகளிலும் நீரோட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மாயாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மசினகுடி - தெப்பக்காடு இடையே மூன்று நாள்களாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கூடலூர் தொரப்பள்ளி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. அவசிய தேவைகளுக்காக நடமாட முடியாமல் மக்கள் தத்தளித்து வருகின்றனர். வெள்ளநீர் அதிகம் சூழ்ந்துள்ள தொரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 48 நபர்களை தற்காலிக மீட்பு முகாம்களில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேல் கூடலூர் பகுதியில் உள்ள பல குடியிருப்புகளின்‌ சுவர்கள் மற்றும் தரைகளில் திடீரென விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அப்பர் பவானி, நடுவட்டம் போன்ற பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், ஊட்டி அருகில் உள்ள இத்தலார் குடியிருப்பு பகுதியில் பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. குடியிருப்புகள் பாதிக்கும் அபாயம் இருப்பதாக மக்கள் பீதியில் உள்ளனர்.

விரிசல்

ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவலாஞ்சி, தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு, பயணிகளுக்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில், மழையின் தீவிரம் காரணமாக தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. காற்று மழையின் தாக்கம் காரணமாக கூடலூரில் வாழை மரங்கள் சேதமடைந்து வருகின்றன. மின்கம்பிகள் மீது மரங்கள் விழுவதால் பல பகுதிகளில் மின் வினியோகம் தடைபட்டிருக்கிறது.

மழை பாதிப்பு குறித்து கூடலூர் மக்கள் பேசுகையில், "மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று காலை முதல் காற்றும் வேகமாக வீசுகிறது. வீடுகளில் விரிசல், வெள்ளம் என அச்சத்தில் இருக்கிறோம். வெள்ளம் வடிய நடவடிக்கை எடுக்கவும், விரிசல் தொடர்பாக புவியியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்" என்றனர்.

விரிசல்

இது குறித்து மாவட்ட நிர்வாகம், "மழை பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறோம். குடியிருப்புகளைச் சுற்றி மழை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ள பகுதி மக்கள், அருகில் உள்ள முகாம்களில் தங்கலாம். மண்சரிவு மற்றும் விரிசல் தொடர்பாக ஆய்வு செய்யப்படும் " என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.