Thailand: சொகுசு ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்ட 6 சுற்றுலாப் பயணிகள்! - மரணத்தில் நீடிக்கும் `மர்மம்

தாய்லாந்தின் பேங்காக்கில் உள்ள கிராண்ட் ஹயாட் எர்வான் ஹோட்டலின் பூட்டிய அறையில் சடலங்கள் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, தனித் தனியே அறை எடுத்து தங்கியிருந்த மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் ஆகியோர் உட்புறமாக தாழிடப்பட்டிருந்த அறைகளில் இறந்து கிடப்பதை உறுதிசெய்து, அந்தச் சடலங்களை மீட்டது. 35 - 55 வயதுக்குட்பட்ட அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த உணவு அப்படியே இருந்தது. அவர்களின் உடலில் எந்தக் காயமும் இல்லை. தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் போராடியதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

தாய்லாந்து ஹோட்டல்

சம்பவ இடத்தை ஆய்வு செய்த காவல்துறை, கொல்லப்பட்ட ஆறு பேரும் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் இருவர் அமெரிக்க குடியுரிமைப் பெற்றவர்கள் என்றும் தெரிவித்திருக்கிறது. மேலும், காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இறந்த சுற்றுலாப் பயணிகள் சயனைடு விஷத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பது தெரியவந்திருக்கிறது. இந்த மரணம் பழிவாங்கும் நோக்கத்தில் நடந்திருக்கலாம், அல்லது இந்த கொலைக்கு வழிபாட்டு முறையுடன் தொடர்புடைய காரணம் இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படுவதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.