பட்டுக்கோட்டை: கணவன் - மனைவி இடையே சண்டை... நடுரோட்டில் மாமியாரை கொலை செய்த மருமகன்!
பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரின் மகன் வீரக்குமார் வயது 33. கூலி தொழிலாளி.
மன்னப்பம்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் முனியாண்டி - சாந்தி. இவர்களது மகள் ரஞ்சிதா வயது 31. வீரக்குமாரும், ரஞ்சிதாவும் பெற்றோர் சம்மதத்துடன் 11 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் வீரக்குமார் மீது கோபம் கொண்ட ரஞ்சிதா மன்னப்பம்குளத்தில் உள்ள தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார். தொடர்ந்து அங்கேயே இருந்து வந்துள்ளார். வீரக்குமார் தனது மனைவி ரஞ்சிதாவை வீட்டுக்கு வரச்சொல்லி பல முறை நேரில் போய் அழைத்துள்ளார். இந்நிலையில் ஊர் பெரியவர்கள் இரண்டு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைக்க முயன்றுள்ளனர். அப்போது, வீரக்குமாருக்கும், ரஞ்சிதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, `எங்களுக்குள்ளான பிரச்னைக்கு காரணம் மாமியார் சாந்தி தான்’ என வீரக்குமார் ஆத்திரத்தில் கூட்டத்திலேயே அவரிடம் தகராறு செய்துள்ளார். கூட்டம் சமாதானம் ஏற்படாமல் முடிவடைந்தது. இந்த சூழலில் ரஞ்சிதா, சாந்தி ஆகியோர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களை வழி மறித்து வீரக்குமார் தகராறு செய்துள்ளார். அப்போது, சாந்தி வீரக்குமாரை திட்டியதால் வீரக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாந்தி முதுகில் வேகமாக குத்தியுள்ளார். இதை தடுக்க முயன்ற மனைவி ரஞ்சிதாவின் கையிலும் காயம் ஏற்பட்டது.

இதில் சரிந்து விழுந்த சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடுரோட்டில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த ரஞ்சிதா பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்கு பதிவு செய்த அதிராம்பட்டினம் போலீஸார் வீரக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


