Anant Radhika Wedding Gifts: மோதிரம் - ரூ.183 கோடி; வாட்ச் - ரூ.2 கோடி - பரிசுப்பொருட்கள் இவைதான்!
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கடந்த 12ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. இந்தியாவில் இது வரை இது போன்ற ஒரு திருமணம் நடந்திராத வகையில் திருமணத்தை முகேஷ் அம்பானி நடத்தி முடித்தார்.
உலகின் முன்னணி இசை மற்றும் நடன கலைஞர்களையும் அழைத்து வந்து திருமணத்திற்கு வந்து விருந்தினர்களை உற்சாகப்படுத்தினார். இதற்காக கலைஞர்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்தார். விருந்தினர்களுக்கு சமைத்துப்போட உலகம் முழுவதும் இருந்து சமையல் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.
மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் கடந்த 12ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு மஞ்சள் வைத்தல், சங்கீத நிகழ்ச்சி, மருதானி வைத்தல், சிவசக்தி பூஜை என இம்மாதம் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சடங்குகள் நடந்தது. இச்சடங்கில் பாலிவுட் பிரபலங்கள் வந்து கலந்து கொண்டனர். அதோடு திருமணம் மற்றும் அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடந்த திருமணத்திற்கு பிந்தைய நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் கெளதம் அதானி, பாலிவுட் பிரபலங்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இத்திருமணத்திற்கு வந்தவர்கள் திருமண தம்பதிக்கு என்ன கிப்ட் கொண்டு வந்து கொடுத்திருப்பார்கள் என்பது மர்மமாக இருக்கிறது. இந்தியாவின் கோடீஸ்வரர் வீட்டு திருமணத்திற்கு வரும் போது கொண்டு வரும் கிப்ட்களும் கொஞ்சம் வசதியாகத்தானே இருக்கவேண்டும். அந்த வகையில் விருந்தினர்கள் கிப்ட் கொண்டு வந்து கொடுத்தார்கள். முகேஷ் அம்பானி ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால் அது தொடர்பான கிப்ட்கள் அதிக அளவில் வந்திருந்தது.
அதேசமயம் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு ஆனந்த் அம்பானி ரிட்டர்ன் கிப்ட் கொடுத்து கெளரவித்தார். ஆனால் ஆனந்த் அம்பானி தனக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு கொடுத்திருக்கும் கிப்ட் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தனக்கு மிகவும் நெருக்கமான விருந்தினர்களுக்கு மட்டும் ஆனந்த் அம்பானி கொடுத்திருக்கும் கிப்ட்களை பார்த்து விருந்தினர்களே ஆச்சரியப்பட்டுப்போனார்கள். வி.ஐ.பி. விருந்தினர்கள் மற்றும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கைக்கடிகாரம் கிப்டாக கொடுத்துள்ளார்.
அந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.2 கோடி. கடிகாரத்தின் பெரும்பகுதி தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. நடிகர் ஷாருக் கான், ரன்வீர் சிங், ஜான்வி கபூரின் காதலன் சிகர் பஹாரியா என்று 25 பேருக்கு மட்டும் இந்த காஸ்ட்லி வாட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. அவை Audemars Piguet ரக வாட்ச்கள. அதில் தங்க பிரெஸ்லெட் இடம் பெற்று இருக்கிறது. 20 மீட்டர் ஆழமான தண்ணீருக்குள் போட்டாலும் தண்ணீர் இறங்காது. இது தவிர இதர விருந்தினர்களுக்கு பனாரஸ், காஷ்மீர், ராஜ்கோட்டில் நெய்யப்பட்ட சேலைகள், கைபேக்குகள், கலைப்பொருட்கள், முத்து மாலைகள் விருந்தினர்களுக்கு ரிட்டர்ன் கிப்டாக கொடுக்கப்பட்டது.
ஆனந்த் அம்பானி தனது திருமணத்தின் போது அணிந்திருந்த மோதிரத்தின் விலை மட்டும் ரூ.183 கோடி. திருமணத்திற்கு அவர் அணிந்திருந்த ஆடையின் மதிப்பு ரூ.14 கோடி. ஆனந்த் அம்பானியின் தாயார் நீடா அம்பானியும் திருமணத்தின் போது 53 கோடி மதிப்புள்ள வைர மோதிரம் அணிந்திருந்தார். திருமணத்திற்கு 1400 பேர் வந்திருந்தனர். 5 ஆயிரம் கோடி செலவு செய்து முகேஷ் அம்பானி இத்திருமணத்தை பிரமாண்டமான முறையில் நடத்தியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


