SBI அறிவித்த `அம்ரித் விரிஷ்டி டெபாசிட் திட்டம்... சீனியர் சிட்டிசன்களுக்கு கிடைக்கும் லாபம் என்ன?
எஸ்.பி.ஐ வங்கி புதிதாக `அம்ரித் விரிஷ்டி’ (SBI Amrit Vrishti) என்ற டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் திட்டத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் (என்.ஆர்.ஐ) முதலீடு செய்யலாம் என்பது கூடுதல் சிறப்பு.
அம்ரித் விரிஷ்டி திட்டம் 444 நாள்களுக்கான டெபாசிட் திட்டம் ஆகும். ஜூலை 15-ம் தேதி முதல் இந்தத் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. 2025-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். வாடிக்கையாளர்களுக்கு அம்ரித் விரிஷ்டி திட்டத்தில் ஆண்டுக்கு 7.25 சதவிகித வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50 சதவிகித வட்டி விகிதம் கிடைக்கும். ஆக, சீனியர் சிட்டிசன்கள் தங்களது டெபாசிட்டுக்கு ஆண்டுக்கு 7.75 சதவிகித வட்டி வருமானம் பெறலாம். தற்போது முதலீட்டாளர்கள் இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
டெபாசிட்டர்கள் நேரடியாக எஸ்.பி.ஐ வங்கிக் கிளைகளிலும் அம்ரித் விரிஷ்டி திட்டத்தில் முதலீடு செய்யலாம். அல்லது, YONO SBI, YONO Lite போன்ற மொபைல் செயலிகள் வழியாகவும் டெபாசிட் செய்யலாம்.
அம்ரித் விரிஷ்டி திட்டம் குறித்து எஸ்.பி.ஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``2025-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அம்ரித் விரிஷ்டி திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும். இதனால், சிறு முதலீட்டாளர்கள் அதிக வட்டி வாய்ப்பைப் பயன்படுத்தி பயன்பெறலாம்” என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


