Ooty: அவலாஞ்சியில் 372 மி.மீ மழை; சுற்றுலாவுக்கு தடை - மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் மழை தீவிரமடைந்துள்ளது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் ஆகிய பகுதிகளில் காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக நீர்நிலைகளுக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது.
காற்றின் வேகத்தால் யூகாலிப்டஸ், சில்வர் ஓக் போன்ற மரங்கள் மரங்கள் சாலைகளில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மின்கம்பிகள் மீது விழுந்து மின் இணைப்பும் பல பகுதிகளில் தடைப்பட்டிருக்கிறது. சாலையில் விழும் மரங்களை உடனுக்குடன் அகற்றி சீரமைக்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் மழையால் சில இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பகுதியில் நேற்று மண்சரிவு ஏற்பட்டது. சாலையில் ஏற்பட்ட இந்த மண்சரிவால் ஊட்டி - கூடலூர் இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இயந்திரங்களின் உதவியுடன் மண்சரிவுகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்துள்ளனர். இரவு முழுவதும் மழை தொடர்ந்து நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் மழை நீடித்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 372 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
மழை பாதிப்புகள் குறித்து வருவாய்த்துறையினர், "அவலாஞ்சி, அப்பர் பவானி, எமரால்டு போன்ற நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவலாஞ்சியில் இன்றும் நாளையும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி ஃபிங்கர் போஸ்ட் பகுதியில் இன்று காலையில் விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டது. மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வருகிறோம். பேரிடர் அபாயத்தில் இருந்து மக்களை மீட்க மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் " என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


